ADDED : நவ 25, 2025 05:40 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டத்தில் மகாபாரத கதையுடன் தொடர்புடைய விஷ்ணு கோயிலில் உண்டியல் உடைக்கப்பட்டு பணம் கொள்ளையடிக்கப்பட்டது.
கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே உண்ணாமலைகடை நாராயணபுரத்தில் ஹிந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள மகாவிஷ்ணு கோயில் உள்ளது. மகாபாரத கதையுடன் இக்கோயிலுக்கு தொடர்புள்ளதாக ஸ்தல வரலாறு கூறுகிறது.
நேற்று காலை பூஜாரி கோபகுமார் நடைதிறக்க வந்தபோது உண்டியல் உடைக்கப்பட்டு இருந்தது கண்டு அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தார்.
கோயில் அதிகாரி முத்தமிழ்செல்வன் மார்த்தாண்டம் போலீசில் புகார் செய்தார்.
இக்கோயிலில் இரவு காவலாளியும் கிடையாது. கேமராவும் பொருத்தப்படவில்லை.

