/
உள்ளூர் செய்திகள்
/
கன்னியாகுமரி
/
நர்சுக்கு பாலியல் தொல்லை முன்னாள் டீன் மீது வழக்கு
/
நர்சுக்கு பாலியல் தொல்லை முன்னாள் டீன் மீது வழக்கு
நர்சுக்கு பாலியல் தொல்லை முன்னாள் டீன் மீது வழக்கு
நர்சுக்கு பாலியல் தொல்லை முன்னாள் டீன் மீது வழக்கு
ADDED : நவ 10, 2025 01:20 AM
நாகர்கோவில்: நாகர்கோவிலில், நர்ஸ் ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக, ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லுாரி முன்னாள் டீன் ராதாகிருஷ்ணன் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில், புன்னைநகரிலுள்ள ஒரு தனியார் மருத்துவமனையில், 19 வயது இளம்பெண் ஒருவர், நர்சாக பணியாற்றி வருகிறார். இம்மருத்துவமனையின் தலைமை டாக்டராக இருப்பவர் ராதா கிருஷ்ணன்.
இவர், ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லுாரி முன்னாள் டீன். இவரது தாய்க்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளதால், வீட்டில் வைத்தே அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவருக்கு உதவி செய்ய நர்ஸ் நியமிக்கப்பட்டிருந்தார்.
டாக்டரின் தாயை பராமரித்துக் கொண்டிருந்த போது, டாக்டர் ராதாகிருஷ்ணன் அந்த நர்ஸ் கையை பிடித்து இழுத்து பாலியல் தொந்தரவு செய்தார்.
நர்ஸ் உறவினர்களிடம் தெரிவித்தார். அவர்கள் நேசமணி நகர் போலீஸ் ஸ்டேஷனை முற்றுகையிட்டு, டாக்டர் மீது நடவடிக்கை கோரி புகார் கொடுத்தனர். இதையடுத்து, ராதாகிருஷ்ணன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
பேத்தியை சீண்டிய தாத்தா நாகர்கோவில் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 14 வயது சிறுமி, அப்பகுதி பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார். அவரது தாய் இறந்து விட்டார். தந்தையும் விட்டு சென்ற நிலையில், பாட்டி வளர்த்து வருகிறார். இவரை, தாத்தாவின் தம்பியான தாத்தா முறை கொண்ட 57 வயது உறவினர் பள்ளிக்கு அழைத்து செல்வது வழக்கம்.
அவ்வாறு அழைத்து சென்ற போது மிட்டாய் வாங்கி கொடுத்து, ஆளில்லாத ஒரு வீட்டுக்கு அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்தார். அங்கிருந்து தப்பிய மாணவி, சக மாணவியரிடம் நடந்ததை கூறி அழுதுள்ளார்.
இதுகுறித்து, தலைமையாசிரியை நாகர்கோவில் மகளிர் போலீசில் புகார் செய்தார். போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் அந்த நபரை கைது செய்தனர்.

