/
உள்ளூர் செய்திகள்
/
கன்னியாகுமரி
/
காதலை கண்டித்த தந்தையை 'மிரட்டிய' மகளால் பரபரப்பு
/
காதலை கண்டித்த தந்தையை 'மிரட்டிய' மகளால் பரபரப்பு
காதலை கண்டித்த தந்தையை 'மிரட்டிய' மகளால் பரபரப்பு
காதலை கண்டித்த தந்தையை 'மிரட்டிய' மகளால் பரபரப்பு
ADDED : நவ 13, 2025 02:35 AM
நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டம், குளச்சல் அருகே மேற்கு நெய்யூரை சேர்ந்த கட்டட தொழிலாளிக்கு, 17 வயதில் மகளும், 13 வயதில் மகனும் உள்ளனர். மகள் பிளஸ் 2 படித்து வருகிறார். இவர், அப்பகுதியை சேர்ந்த 18 வயது இளைஞனை காதலித்துள்ளார்.
இவர், அடிக்கடி மாணவியின் வீட்டிற்கு வருவதை வழக்கமாக கொண்டுள்ளார். இதை தந்தை தட்டி கேட்டுள்ளார். நேற்று முன்தினம் இதுபோல அந்த இளைஞர் உணவு வாங்கி வந்து, வீட்டுக்குள் இருவரும் சாப்பிட்டுள்ளனர்.
அந்த நேரத்தில் அங்கு வந்த மாணவியின் தந்தை, இருவரிடமும் தகராறு செய்து, அவர்களை குளச்சல் மகளிர் போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்துச் சென்றார்.
'எங்களை போலீசில் பிடித்துக் கொடுத்தால், உன் மீது நான் போக்சோ புகார் கொடுப்பேன்' என்று மகள் மிரட்டல் விடுத்தார். இதனால் தந்தை அங்கிருந்து கண்ணீருடன் வெளியேறினார். பின்னர், தாயை அழைத்து மாணவியை போலீசார் ஒப்படைத்தனர். இளைஞரை எச்சரித்து அனுப்பினர்.

