/
உள்ளூர் செய்திகள்
/
கன்னியாகுமரி
/
அண்ணனை குத்தி கொன்ற தம்பி கைது
/
அண்ணனை குத்தி கொன்ற தம்பி கைது
ADDED : அக் 24, 2024 02:35 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நாகர்கோவில்:நாகர்கோவில் அருகே கோட்டார் அம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் சுப்புலட்சுமி. மகன்கள் சுபாஷ் 32, சுந்தர் 26. குடிப்பழக்கம் கொண்ட சுபாஷ் தனது தாயிடம் அடிக்கடி தகராறு செய்து தாக்கியுள்ளார்.
இதை அவரது தம்பி தட்டிக் கேட்டு வந்துள்ளார். நேற்று முன்தினம் இதுபோல தகராறில் ஈடுபட்டதால் சுபாஷின் வயிற்றில் சுந்தர் கத்தியால் குத்தினார்.
சுபாஷை சுப்புலட்சுமி மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தார்.
அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். கோட்டார் போலீசார் சுந்தரை கைது செய்தனர்.