/
உள்ளூர் செய்திகள்
/
கன்னியாகுமரி
/
ஊழியரிடம் சில்மிஷம் கடை உரிமையாளர் கைது
/
ஊழியரிடம் சில்மிஷம் கடை உரிமையாளர் கைது
ADDED : செப் 29, 2024 02:30 AM
நாகர்கோவில்:கன்னியாகுமரி மாவட்டம், நித்திரவிளை அருகே அடைக்காகுழியை சேர்ந்தவர் அபிலாஷ் பெர்லின், 42. இவர் பாறசாலையில் ஊட்டச்சத்து நிறுவனம் நடத்தி வருகிறார்.
இங்கு பெண் ஊழியர் பணி செய்தார். பூவாறு பகுதியில் உள்ள சில நிறுவனங்களுக்கு பொருட்கள் சப்ளை செய்ய வேண்டும் என்று கூறி, தன் காரில் பெண் ஊழியரை அழைத்துச் சென்றார்.
ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் காரை நிறுத்திய அபிலாஷ் பெர்லின், அவரை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார். கார் கதவை திறந்து அந்த பெண் வெளியே ஓடினார்.
அப்பகுதி மக்கள் அவரை காப்பாற்றி, பாறசாலை போலீசில் ஒப்படைத்தனர். அபிலாஷ் பெர்லினை கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.