/
உள்ளூர் செய்திகள்
/
கன்னியாகுமரி
/
மனைவியை 10 துண்டுகளாக வெட்டிக்கொலை செய்தேன்: கொடூரன் வாக்குமூலம்
/
மனைவியை 10 துண்டுகளாக வெட்டிக்கொலை செய்தேன்: கொடூரன் வாக்குமூலம்
மனைவியை 10 துண்டுகளாக வெட்டிக்கொலை செய்தேன்: கொடூரன் வாக்குமூலம்
மனைவியை 10 துண்டுகளாக வெட்டிக்கொலை செய்தேன்: கொடூரன் வாக்குமூலம்
UPDATED : டிச 21, 2024 08:15 AM
ADDED : டிச 21, 2024 02:29 AM

நாகர்கோவில்:திருநெல்வேலி, பாளையங்கோட்டை சமாதானபுரத்தை சேர்ந்தவர் மாரிமுத்து, 36. இவருக்கும் சீவலப்பேரி பகுதியை சேர்ந்த மரிய சந்தியா, 30 என்பவருக்கும் 10 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. இரண்டு குழந்தைகள் உள்ளனர். மரிய சந்தியாவின் நடத்தையில் சந்தேகப்பட்டு, அவரை மாரி முத்து அடித்து துன்புறுத்தி வந்துள்ளார்.
உறவினர்கள் இருவரையும் சமாதானம் செய்தாலும், தொடர்ந்து மாறி மாறி சண்டை போட்டதால் குழந்தைகளை அங்குள்ள விடுதியில் தங்கி படிக்க வைத்துள்ளனர்.
உறவினர் ஒருவரின் ஏற்பாட்டில், அஞ்சுகிராமம் பால் குளத்தில் உள்ள வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் வசித்து வந்தனர்.
இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு மூன்று டிராவல் பேக்கை எடுத்துக் கொண்டு வீட்டை காலி செய்வதாக அருகில் உள்ளவர்களிடம் கூறி விட்டு செல்ல முயன்ற போது நாய் குரைத்தது.
பேக்கை திறந்து பார்த்த அந்த பகுதி மக்கள் மரிய சந்தியாவின் உடல் இருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்த அவர்கள், அஞ்சு கிராமம் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.
போலீசார் விரைந்து மாரிமுத்துவை கைது செய்தனர். மாரிமுத்துவிடம் நடத்திய விசாரணையில் அவர் அளித்த வாக்குமூலம்:
எனக்கும், மரிய சத்யாவுக்கும் 10 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. நான் இறைச்சிவெட்டும் வேலைக்கு செல்வேன். மனைவி மீன் ஏற்றுமதி நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.
அடிக்கடி போனில் பேசிக் கொண்டிருந்ததால், எனக்கு பிடிக்கவில்லை. நான் பலமுறை சொல்லியும் கேட்காததால் கண்டித்தேன். இதனால் எங்களுக்குள் தகராறு இருந்து வந்தது.
குழந்தைகளின் எதிர்காலம் பாதித்துவிடக்கூடாது என்பதற்காக இருவரையும் அங்குள்ள விடுதியில் தங்கி படிக்க வைத்தோம். கடந்த 40 நாட்களுக்கு முன் பால்குளத்தில் வந்து குடியேறினோம்.
இங்கு வந்த பிறகும் எங்கள் தகராறு நடந்தது. ஆத்திரமடைந்த நான் அவரின் கழுத்தில் குத்தினேன். பேச்சு மூச்சு இன்றி மயங்கி கீழே விழுந்தார் அலறல் சத்தம் வெளியே கேட்காமல் இருப்பதற்காக டிவி சத்தத்தை அதிகமாக வைத்துக் கொண்டு தலையை தனியாக துண்டித்து எடுத்தேன்.
பின்னர் கை, கால் என உடலை துண்டு, துண்டாக வெட்டினேன். ரத்தம் வெளியே தெரியாமல் இருப்பதற்காக உடலை சுமார் அரை மணி நேரம் தண்ணீரில் கழுவினேன். பின்னர் தலை, கை, கால் பாகங்களை மூன்று பேக்கில் அடைத்தேன் மாலையில் வெளியே சென்றால் தெரிந்து விடும் என்பதால் இரவு, 9:00 மணி வரை காத்திருந்து ஆட்டோ மூலம் வெளியே சென்று உடலை எங்காவது வீசிவிட்டு தப்பி சென்று விடலாம் என்று நினைத்து வெளியே வந்தேன்.
அப்போது நாய் குரைத்ததால் என்னால் உடலை வெளியே கொண்டு செல்ல முடியவில்லை.
மேலும் சந்தேகம் அடைந்த பொது மக்கள் பேக்கை திறந்து பார்த்த போது, மனைவியின் உடல் இருந்ததை கண்டு சந்தேகம் அடைந்து போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.
போலீசார் வந்து என்னை கைது செய்தனர்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

