/
உள்ளூர் செய்திகள்
/
கன்னியாகுமரி
/
காதலுக்கு எதிராக தீக்குளித்த பெற்றோருடன் மகளும் பலி
/
காதலுக்கு எதிராக தீக்குளித்த பெற்றோருடன் மகளும் பலி
காதலுக்கு எதிராக தீக்குளித்த பெற்றோருடன் மகளும் பலி
காதலுக்கு எதிராக தீக்குளித்த பெற்றோருடன் மகளும் பலி
ADDED : ஏப் 13, 2025 03:22 AM
திருவனந்தபுரம்: மகளின் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து தாய் பெட்ரோல் ஊற்றி தீ வைத்ததில், அவர், மகள், தந்தை ஆகிய மூன்று பேரும் உயிரிழந்தனர்.
கேரள மாநிலம் கோட்டயத்தைச் சேர்ந்தவர் சத்தியபாலன், 53. மனைவி ஸ்ரீஜா, 48, மகள் அஞ்சலி, 28, மகன் அகிலேஷ், 25. சத்தியபாலன் டீக்கடை நடத்தி வந்தார்.
அஞ்சலி வெளிநாட்டில் வேலை பார்த்தார். தந்தையின் கடைக்கு பக்கத்தில் மற்றொரு நிறுவனத்தில் வேலை பார்க்கும் ஒருவரை, அந்த பெண் காதலித்ததாக கூறப்படுகிறது. இதற்கு அஞ்சலியின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
வெளிநாட்டில் வேலை பார்த்த அந்த பெண், ஊருக்கு வந்திருந்தார். அந்த இளைஞர் பெண் கேட்டு தன் நண்பர்களுடன் சத்தியபாலன் வீட்டுக்கு நேற்று சென்றார்.
ஆத்திரமடைந்த ஸ்ரீஜா வீட்டின் கதவை பூட்டி பெட்ரோலை தன் உடலில் ஊற்றி தீ வைத்தார். அவரைக் காப்பாற்ற சத்தியபாலனும், அஞ்சலியும் முயன்ற போது அவர்கள் மீதும் தீப்பற்றியது.
வீடு தீப்பற்றியதை அடுத்து, காஞ்சிரப்பள்ளி தீயணைப்பு நிலையத்தினர் வந்து கதவை உடைத்து உள்ளே சென்றனர். ஸ்ரீஜா சம்பவ இடத்திலேயே இறந்தார்.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சத்தியபாலனும் அஞ்சலியும் இறந்தனர். குளியல் அறையில் இருந்த அகிலேஷுக்கும் தீக்காயம் ஏற்பட்டது. அவர் தீவிர சிகிச்சையில் உள்ளார். எருமேலி போலீசார் விசாரிக்கின்றனர்.

