/
உள்ளூர் செய்திகள்
/
கன்னியாகுமரி
/
கட்சிக்கு ஆள் சேர்ப்பதில் தகராறு: காங்., உறுப்பினர் கழுத்தறுத்த மூவர்
/
கட்சிக்கு ஆள் சேர்ப்பதில் தகராறு: காங்., உறுப்பினர் கழுத்தறுத்த மூவர்
கட்சிக்கு ஆள் சேர்ப்பதில் தகராறு: காங்., உறுப்பினர் கழுத்தறுத்த மூவர்
கட்சிக்கு ஆள் சேர்ப்பதில் தகராறு: காங்., உறுப்பினர் கழுத்தறுத்த மூவர்
ADDED : அக் 27, 2025 11:54 PM
நாகர்கோவில்: கட்சிக்கு ஆள் சேர்க்கும் விவகாரத்தில் ஏற்பட்ட விரோதத்தில் காங்கிரஸ் உறுப்பினரின் கழுத்தில் கத்தியால் அறுத்த இந்திய தேசிய லீக் கட்சி நிர்வாகி உட்பட 3 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் அருகே பர்னட்டிவிளாயைச் சேர்ந்தவர் சித்திக் 22. சமையல் தொழிலாளி. இளைஞர் காங்கிரஸ் உறுப்பினராக உள்ளார். இவர் தேசிய லீக் கட்சியைச் சேர்ந்த சியாம் 23, என்பவரை காங்.,ல் சேர அழைத்தார். இதை இந்திய தேசிய லீக் கட்சி மாவட்ட அமைப்பாளர் முகமது பஷீத் 23, கண்டித்தார்.
பேச்சு வார்த்தைக்கு வரும்படி சித்திக்கை குளச்சல் அக்கரைப்பள்ளி பகுதிக்கு முகமது பஷீத் அழைத்து சென்றார். அங்கிருந்த முகமது பாசில் 21, முகமது ஆதில் 20 ஆகிய மூவரும் சித்திக்கிடம் தங்கள் கட்சியை சேர்ந்தவரை எப்படி அழைக்கலாம் என தகராறில் ஈடுபட்டனர். சித்திக்கின் கழுத்தில் கத்தியால் அறுத்தனர். அப்பகுதியில் உள்ளவர்கள் ஓடிவந்த போது மூவரும் தப்பி ஓடிவிட்டனர். சித்திக் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சித்திக்கின் தந்தை பாரூக் கொடுத்த புகாரின் பேரில் மூவர் மீதும் குளச்சல் போலீசார் கொலை முயற்சி உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

