/
உள்ளூர் செய்திகள்
/
கன்னியாகுமரி
/
நாகர்கோவில் அருகே எம்.ஜி.ஆர்., சிலை உடைப்பு
/
நாகர்கோவில் அருகே எம்.ஜி.ஆர்., சிலை உடைப்பு
ADDED : அக் 27, 2025 12:54 AM
நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே எம்.ஜி.ஆர். சிலை சேதப்படுத்தப்பட்டது. அ.தி.மு.க.,வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
நாகர்கோவில் அருகே பார்வதிபுரத்தில் 1995ல் நிறுவப்பட்ட எம்.ஜி.ஆர். சிலை உள்ளது. நேற்று முன்தினம் இரவு சிலையின் இடது கையை யாரோ உடைத்துள்ளனர்.
நேற்று காலை இது பற்றி தகவல் தெரிந்து கிழக்கு மாவட்ட செயலாளர் தளவாய் சுந்தரம் தலைமையில் முன்னாள் அமைச்சர் பச்சைமால், முன்னாள் எம்.பி., நாஞ்சில் வின்சென்ட் உள்ளிட்ட ஏராளமான அ.தி.மு.க., நிர்வாகிகள் அங்கு குவிந்தனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சிலையை சேதப்படுத்தியவர்கள் உடனடியாக கைது செய்யப்படுவார்கள் என்று போலீசார் உறுதி அளித்ததை தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது.

