/
உள்ளூர் செய்திகள்
/
கன்னியாகுமரி
/
பாதிரியார் இல்லத்தில் ஊழியர் கொலை தி.மு.க., முன்னாள் ஒன்றிய செயலர் சரண்
/
பாதிரியார் இல்லத்தில் ஊழியர் கொலை தி.மு.க., முன்னாள் ஒன்றிய செயலர் சரண்
பாதிரியார் இல்லத்தில் ஊழியர் கொலை தி.மு.க., முன்னாள் ஒன்றிய செயலர் சரண்
பாதிரியார் இல்லத்தில் ஊழியர் கொலை தி.மு.க., முன்னாள் ஒன்றிய செயலர் சரண்
ADDED : ஜன 30, 2024 12:36 AM
நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டம் மைலோடு சர்ச் பாதிரியார் இல்லத்தில் அரசு போக்குவரத்து கழக ஊழியர் சேவியர் குமார் அடித்து கொலை செய்யப்பட்ட வழக்கில் தி.மு.க., முன்னாள் செயலர் ரமேஷ்பாபு நாகப்பட்டினம் நீதிமன்றத்தில் சரணடைந்தார். இதற்கிடையில் திருச்செந்தூர் நீதிமன்றத்தில் சரணடைந்த பாதிரியார் ராபின்சன்னை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் மனு செய்துள்ளனர்.
ஜன., 20-ல் மைலோடு பாதிரியார் இல்லத்தில் பங்கு பேரவை தொடர்பாக நடந்த ஆலோசனை கூட்டத்தில் இரு தரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டது.
இதில் சேவியர் குமார் அடித்து கொலை செய்யப்பட்டார். நீதிமன்றத்தின் உத்தரவுப்படி அவரது உடல் சர்ச் கல்லறைத் தோட்டத்தில் அடக்கம் செய்யப்பட்டது.
இதுதொடர்பாக தி.மு.க., ஒன்றிய முன்னாள் செயலர் ரமேஷ் பாபு, பாதிரியார் ராபின்சன் உட்பட 15 பேர் மீது இரணியல் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இதில் ஜஸ்டஸ் ரோக் 58, வின்சென்ட் 60, விபின் 25, கைது செய்யப்பட்டனர்.
ராபின்சன் திருச்செந்தூர் நீதிமன்றத்தில் சரணடைந்தார். தி.மு.க., ஒன்றிய முன்னாள் செயலர் ரமேஷ் பாபு நேற்று நாகப்பட்டினம் நீதிமன்றத்தில் சரணடைந்தார்.
இதில் தொடர்புடைய 10 பேரை பிடிக்க ஐந்து தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
திருச்செந்தூர் நீதிமன்றத்தில் சரணடைந்த பாதிரியார் ராபின்சனை போலீஸ் காவலில் எடுத்து விசாரிப்பதற்காக இரணியல் நீதிமன்றத்தில் போலீசார் மனு தாக்கல் செய்துள்ளனர்.