/
உள்ளூர் செய்திகள்
/
கன்னியாகுமரி
/
கொலை வழக்கில் தி.மு.க., செயலர் சரண்
/
கொலை வழக்கில் தி.மு.க., செயலர் சரண்
ADDED : ஜன 30, 2024 12:48 AM
நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டம், மைலோடு சர்ச் பாதிரியார் இல்லத்தில், ஜன., 20-ல் பங்கு பேரவை தொடர்பாக நடந்த ஆலோசனை கூட்டத்தில் இரு தரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டது.
இதில், அரசு போக்குவரத்து கழக ஊழியர் சேவியர் குமார் அடித்து கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக, தி.மு.க., முன்னாள் ஒன்றிய செயலர் ரமேஷ் பாபு, பாதிரியார் ராபின்சன் உட்பட 15 பேர் மீது இரணியல் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். பாதிரியார் ராபின்சன் திருச்செந்துார் நீதிமன்றத்தில் சரணடைந்தார். தி.மு.க., செயலர் ரமேஷ் பாபு நேற்று நாகப்பட்டினம் நீதிமன்றத்தில் சரணடைந்தார்.
இதில் தொடர்புடைய 10 பேரை பிடிக்க ஐந்து தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. ராபின்சனை காவலில் எடுத்து விசாரிக்க இரணியல் நீதிமன்றத்தில் போலீசார் மனு தாக்கல் செய்துள்ளனர்.