/
உள்ளூர் செய்திகள்
/
கன்னியாகுமரி
/
பஸ்கள் மோதல் டிரைவர் பலி 38 பேர் காயம்
/
பஸ்கள் மோதல் டிரைவர் பலி 38 பேர் காயம்
ADDED : பிப் 04, 2024 02:47 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நாகர்கோவில்: நாகர்கோவிலில் இருந்து நேற்று திருவனந்தபுரம் நோக்கி சென்று கொண்டிருந்த கேரள அரசு பஸ், மார்த்தாண்டம் மேம்பாலத்தில் முன்னால் சென்ற ஒரு வாகனத்தை முந்த முயன்றபோது, எதிரே நாகர்கோவில் நோக்கி வந்து கொண்டிருந்த தமிழக அரசு பஸ் மீது நேருக்கு நேர் மோதியது.
இந்த விபத்தில் கேரள அரசு பஸ் டிரைவர் அனீஷ் கிருஷ்ணன், 43, மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட நிலையில் இறந்தார். படுகாயம் அடைந்த 38 பயணியர் குழித்துறை, நாகர்கோவில் அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.