/
உள்ளூர் செய்திகள்
/
கன்னியாகுமரி
/
டிரைவர் கொலை: மனைவியின் காதலன் உட்பட 2 பேர் கைது
/
டிரைவர் கொலை: மனைவியின் காதலன் உட்பட 2 பேர் கைது
ADDED : நவ 06, 2025 01:17 AM
நாகர்கோவில்: லாரி டிரைவர் கொலை செய்யப்பட்ட வழக்கில், மனைவியின் காதலன் உட்பட, இருவரை போலீசார் கைது செய்தனர்.
கன்னியாகுமரி மாவட்டம், பிரம்மபுரத்தை சேர்ந்தவர் கிருஷ்ணதாஸ், 36. லாரி டிரைவர். இவரது மனைவி பவித்ரா. குழந்தைகள் இல்லை. நவ., 1 காலை வில்லுக்குறி அருகே பாழடைந்த கட்டடத்தில், கிருஷ்ணதாஸ் இறந்து கிடந்தார். விசாரித்த போலீசார், பவித்ரா, 33, மாமியார் முத்துலட்சுமி, 57, ஆகியோரை கைது செய்தனர்.
பவித்ராவிடம் நடத்திய விசாரணையில், 'நான் ரமேஷ் என்பருடன் தனிமையில் இருந்ததை பார்த்த கிருஷ்ணதாஸ் கோபத்தில், வீட்டில் இருந்த பொருட்களை அடித்து உடைத்து, மொபைல் போனையும் உடைத்தார்.
'இது குறித்து நான் ரமேஷிடம் கூறினேன். அப்போது அவர் இது பற்றி கவலைப்பட வேண்டாம்; நான் பார்த்துக் கொள்கிறேன் என கூறினார். அதன் பின் தான் கொலை நடந்தது' என்றார்.
இந்நிலையில், கேரளா மாநிலம், பம்பையில் பதுங்கியிருந்த ரமேஷ், அவரது நண்பர் விமல் என்பவரையும் போலீசார் கைது செய்தனர்.

