/
உள்ளூர் செய்திகள்
/
கன்னியாகுமரி
/
லண்டன் தோழியின் ஐபோன் ஆசை டிரைவருக்கு ரூ.4.15 லட்சம் போச்சு
/
லண்டன் தோழியின் ஐபோன் ஆசை டிரைவருக்கு ரூ.4.15 லட்சம் போச்சு
லண்டன் தோழியின் ஐபோன் ஆசை டிரைவருக்கு ரூ.4.15 லட்சம் போச்சு
லண்டன் தோழியின் ஐபோன் ஆசை டிரைவருக்கு ரூ.4.15 லட்சம் போச்சு
ADDED : ஜன 11, 2025 10:39 PM
நாகர்கோவில்:கன்னியாகுமரி மாவட்டம், இரணியலை சேர்ந்த ஆட்டோ டிரைவர் ஒருவருக்கு அறிமுகம் இல்லாத எண்ணில் இருந்து அழைப்பு வந்தது. அதில் பேசிய பெண் குரல், தவறுதலாக அழைத்ததாக கூறி விட்டு தொடர்ந்து பேசியுள்ளார்.
ஒரு நாள் பேசுகையில், 'உங்கள் போன் சரியில்லை; அடிக்கடி பேசுவது கேட்பதில்லை' என்று கூறி, 'லண்டனில் இருந்து, ஐபோன் ஒன்றை பரிசாக அனுப்புகிறேன்' எனக் கூறியுள்ளார்.
இதனால் மகிழ்ச்சியில் திளைத்த ஆட்டோ டிரைவருக்கு, ஒரு வார இடைவெளியில் மும்பை ஏர்போர்ட்டில் இருந்து பேசுவதாக கூறிய நபர், 'உங்களுக்கு வந்துள்ள பார்சலில் அதிக விலை உள்ள மொபைல் போன் உள்ளதால் 1.5 லட்சம் ரூபாயும், டெலிவரி கட்டணமாக, 50,000 ரூபாயும் கட்ட வேண்டும்' எனக்கூறி, ஒரு வங்கி கணக்கு எண்ணை கொடுத்துள்ளார். ஆட்டோ டிரைவரும் அந்த எண்ணில் பணத்தை செலுத்தியுள்ளார்.
பார்சல் வரும் என்று எதிர்பார்த்திருந்த போது, மீண்டும் திருவனந்தபுரம் விமான நிலையத்திலிருந்து பேசுவதாக அழைப்பு வந்தது. அதில், 'லண்டனில் இருந்து வந்துள்ள பார்சலுக்கு மேலும், 2 லட்சத்து, 15,000 ரூபாய் கட்ட வேண்டும்' எனக் கூறி, மற்றொரு வங்கி கணக்கை கொடுத்துள்ளனர். அதையும் செலுத்தி காத்திருந்த ஆட்டோ டிரைவருக்கு ஏமாற்றமே மிஞ்சியது.
இதைத்தொடர்ந்து, லண்டன் தோழிக்கு போன் செய்தபோது, இணைப்பு கிடைக்கவில்லை. ஆட்டோ டிரைவர் புகாரின்படி, நாகர்கோவில் சைபர் கிரைம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.