ADDED : மார் 08, 2024 02:21 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நாகர்கோவில்:கன்னியாகுமரி மாவட்டம் பூதப்பாண்டி அருகே வீரவநல்லூரை சேர்ந்தவர் சிவகுமார் (எ) சுடலையாண்டி 56. வடசேரி பஸ் ஸ்டாண்டில் டீக்கடையில் மாஸ்டராக பணியாற்றி வந்த போது இவர் மீது போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டது.
கைதாகி திருநெல்வேலி சிறையில் இருந்த இவரை கடந்த ஐந்து மாதங்களுக்கு முன்னர் நாகர்கோவில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி விட்டு மீண்டும் சிறைக்கு கொண்டு செல்ல வடசேரி பஸ் ஸ்டாண்டுக்கு வந்த போது அங்கிருந்து அவர் கழிவறை செல்வதாக கூறிவிட்டு போலீசாரிடம் இருந்து தப்பி ஓடி விட்டார்.
பல இடங்களில் தேடியும் கிடைக்காத நிலையில் ஆந்திர மாநிலம் திருப்பதியில் தலைமறைவாக இருந்த அவரை தனிப்படை போலீசார் கைது செய்தனர். நாகர்கோவில் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்ட பின்னர் அவர் திருநெல்வேலி சிறையில் அடைக்கப்பட்டார்.

