/
உள்ளூர் செய்திகள்
/
கன்னியாகுமரி
/
பொங்கல் விடுமுறை நாட்களில் கூடுதல் நேரம் படகு போக்குவரத்து
/
பொங்கல் விடுமுறை நாட்களில் கூடுதல் நேரம் படகு போக்குவரத்து
பொங்கல் விடுமுறை நாட்களில் கூடுதல் நேரம் படகு போக்குவரத்து
பொங்கல் விடுமுறை நாட்களில் கூடுதல் நேரம் படகு போக்குவரத்து
ADDED : ஜன 04, 2024 01:06 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நாகர்கோவில்:கன்னியாகுமரியில் கடல் நடுவில் அமைந்துள்ள விவேகானந்தர் பாறை மற்றும் திருவள்ளுவர் சிலைக்கு பூம்புகார் போக்குவரத்துக் கழக படகுகளில் சுற்றுலா பயணிகள் அழைத்துச் செல்லப்படுகின்றனர். வழக்கமாக காலை 8:00 மணி முதல் மாலை 4:00 மணி வரை இந்த படகு போக்குவரத்து நடக்கிறது.
ஜன., 14 முதல் பொங்கல் விடுமுறை துவங்கவுள்ளதால் இந்த நாட்களில் கூட்டம் மிக அதிகம் காணப்படும். எனவே ஜன.,14 முதல் 17 வரை 4 நாட்கள் காலை 6:00 முதல் மாலை 6:00 மணி வரை படகு போக்குவரத்து நடக்கும் என பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது.