/
உள்ளூர் செய்திகள்
/
கன்னியாகுமரி
/
அரசு பொறியியல் கல்லுாரியில் போலி நியமன ஆணை: 3 பேர் கைது
/
அரசு பொறியியல் கல்லுாரியில் போலி நியமன ஆணை: 3 பேர் கைது
அரசு பொறியியல் கல்லுாரியில் போலி நியமன ஆணை: 3 பேர் கைது
அரசு பொறியியல் கல்லுாரியில் போலி நியமன ஆணை: 3 பேர் கைது
ADDED : ஆக 09, 2025 02:06 AM

நாகர்கோவில்:நாகர்கோவில் அரசு பொறியியல் கல்லுாரியில் போலி பணி நியமன ஆணை வழங்கிய கல்லுாரி ஊழியர் உட்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்
கன்னியாகுமரி மாவட்டம் லாயம் பகுதியைச் சேர்ந்த இருவர் நாகர்கோவில் கோணத்தில் உள்ள அரசு பொறியியல் கல்லுாரிக்கு பணி நியமன ஆணை கடிதத்துடன் வந்திருந்தனர். ஒருவர் லேப் டெக்னீசியன் பணிக்கும் மற்றொருவர் அலுவலக உதவியாளர் பணிக்கும் என ஆணை நகல் வைத்திருந்தனர். கல்லுாரி பணியாளர்கள் அந்த ஆணையை பார்த்த போது அது போலி என தெரிந்ததால் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.
போலீசார் வந்து இருவரிடமும் விசாரணை நடத்திய போது திண்டிவனம் அரசு பொறியியல் கல்லுாரியில் ஒப்பந்த பணியாளராக பணியாற்றும் செல்வகுமார் 50, என்பவரிடம் இருவரும் ஆறு லட்சம் ரூபாய் கொடுத்து ஏமாந்தது தெரியவந்தது.
நேசமணி நகர் போலீசார் திண்டிவனத்துக்கு சென்று செல்வகுமாரை கைது செய்தனர். இவர் ஒப்பந்த பணியாளர் என்பதால் அவருக்கு ஆறு மாதத்திற்கு ஒரு தடவை பணி நியமன ஆணை வழங்கப்படுவதை பயன்படுத்தி போலி ஆணை தயாரித்தது தெரியவந்தது .
அவருக்கு கோணம் அரசு பொறியியல் கல்லுாரி சீல் செய்து கொடுத்ததாக திண்டிவனத்தை சேர்ந்த பாபு 45, கம்ப்யூட்டரில் டைப்பிங் செய்து கொடுத்ததற்காக முகமது இஸ்மாயில் 50, ஆகியோரை கைது செய்தனர் அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர்.