/
உள்ளூர் செய்திகள்
/
கன்னியாகுமரி
/
சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை மாஜி ராணுவ வீரருக்கு சிறை
/
சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை மாஜி ராணுவ வீரருக்கு சிறை
சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை மாஜி ராணுவ வீரருக்கு சிறை
சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை மாஜி ராணுவ வீரருக்கு சிறை
ADDED : ஏப் 19, 2025 01:05 AM
நாகர்கோவில்10 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கிய மாஜி ராணுவ வீரருக்கு 20 ஆண்டு சிறை தண்டனை விதித்து நாகர்கோவில் போக்சோ நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே உள்ள கொடுங்குளத்தைச் சேர்ந்தவர் சுதர்சன் 49. மாஜி ராணுவ வீரர். 2018ல் இவர் பக்கத்து ஊரைச் சேர்ந்த 10 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கினார். இது தொடர்பாக சிறுமி தரப்பில் மார்த்தாண்டம் அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷனில் புகார் செய்யப்பட்டது.
போலீசார் சுதர்சனை கைது செய்தனர். இந்த வழக்கை விசாரித்த நாகர்கோவில் போக்சோ நீதிமன்ற நீதிபதி சுந்தரய்யா, சுதர்சனுக்கு 20 ஆண்டு சிறை தண்டனையும் 3000 ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.