/
உள்ளூர் செய்திகள்
/
கன்னியாகுமரி
/
ஆன்லைனில் ரூ.56 லட்சம் மோசடி மும்பையைச் சேர்ந்த நால்வர் கைது
/
ஆன்லைனில் ரூ.56 லட்சம் மோசடி மும்பையைச் சேர்ந்த நால்வர் கைது
ஆன்லைனில் ரூ.56 லட்சம் மோசடி மும்பையைச் சேர்ந்த நால்வர் கைது
ஆன்லைனில் ரூ.56 லட்சம் மோசடி மும்பையைச் சேர்ந்த நால்வர் கைது
ADDED : டிச 08, 2024 02:42 AM
நாகர்கோவில்:டாக்டர் மற்றும் இன்ஜினியரிடம் 56 லட்ச ரூபாய் ஆன்லைனில் மோசடி செய்ததாக மும்பையைச் சேர்ந்த 4 பேரை நாகர்கோவில் சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர்.
கன்னியாகுமரி மாவட்டம் மணவாளக்குறிச்சியை சேர்ந்த இன்ஜினியர் ஒருவர் ஆன்லைன் பகுதி நேர வேலை என்ற அலைபேசி லிங்கில் இணைந்துள்ளார். அந்த குழுவில் பலர் இருந்தனர். அவர்கள் தங்களுக்கு ஆயிரக்கணக்கான ரூபாய் கிடைத்ததாக பதிவிட்டிருந்தனர். இதைத்தொடர்ந்து இவரும் அதில் பணம் செலுத்தி விளையாடியுள்ளார். 48 லட்ச ரூபாய் வரை செலுத்திய பின்னர் தான் அவர் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து நாகர்கோவில் சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார்.
இதுபோல நாகர்கோவிலை சேர்ந்த டாக்டர் ஒருவரிடம் மத்திய வருவாய்த்துறை அதிகாரி போல பேசி 8 லட்சம் ரூபாய் மோசடி செய்யப்பட்டது. இந்த இரண்டு புகார்கள் குறித்தும் நாகர்கோவில் சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தியதில் மும்பையைச் சேர்ந்த கும்பல் இவர்களை ஏமாற்றியது தெரியவந்தது.
நால்வர் கைது: இன்ஸ்பெக்டர் சொர்ண ராணி தலைமையிலான தனிப்படை போலீசார் மும்பை சென்று அம்மாநில போலீசின் உதவியுடன் ரம்ஜான் மஸ்ரூத் ஷேக் 28, அதுல் விலாஸ் சவான் 27, மொரேஷ்வர் 43, தவ்பிக் காலித் சித்திக் 38, ஆகிய நான்கு பேரையும் கைது செய்து நாகர்கோவில் அழைத்து வந்தனர்.
இவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் இவர்களது கூட்டாளிகள் ராஜஸ்தான், கோவா போன்ற மாநிலங்களில் இருப்பதாக தெரியவந்துள்ளது. இவர்களையும் பிடிக்க போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதனிடையே கைது செய்யப்பட்ட நான்கு பேரும் நாகர்கோவில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.