/
உள்ளூர் செய்திகள்
/
கன்னியாகுமரி
/
போதையில் மிதக்க 'பிறந்தநாள் பார்ட்டி' வலைதள விளம்பரத்தால் சிக்கிய கும்பல்; பெண் உட்பட எட்டு பேருக்கு சிறை

ADDED : டிச 11, 2025 05:36 AM
நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டம் அஞ்சு கிராமம் அருகே மயிலாடி பகுதியில் உள்ள ரிசார்ட்டில் தடை செய்யப்பட்ட போதை பொருட் களுடன் பிறந்தநாள் கொண்டாட்டம் நடப்பதாக வலைதளங்களில் விளம்பரம் பரவியது.
எஸ்.பி. ஸ்டாலின் உத்தரவின் பேரில் போலீசார் அங்கு சோதனை நடத்தினர். அங்கு எம்.டி. எம்., எல்.எஸ்.டி உள்ளிட்ட போதை பொருட்கள் பயன்படுத்தியது உறுதி செய்யப்பட்டது. அங்கு இருந்த அனைவரும் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். தீவிர விசாரணைக்கு பின்னர் எட்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் கோகுல் கிருஷ்ணன் 34, மனைவி சவுமி 33, கேரள மாநிலம் ஆலப்புழாவை சேர்ந்த விதுன் 30, கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரத்தைச் சேர்ந்த கோவிந்த கிருஷ்ணா 27, கோவாவை சேர்ந்த ஜெயராஜ் சிங் கவுடா 35, பெங்களூருவை சேர்ந்த சையத் பர்ஷான் 35, வாலன்ஸ்பால் 36, ரிசார்ட் உரிமையாளர் ராஜு 64 , ஆகிய எட்டு பேர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
போதைப்பொருள் விற்பனை கும்பலுடன் இவர்களுக்கு உள்ள தொடர்பு பற்றி தொடர்ந்து விசாரணை நடப்பதாக போலீசார் தெரிவித்தனர்.