/
உள்ளூர் செய்திகள்
/
கன்னியாகுமரி
/
கார் ஓட்டும் போது மாரடைப்பு; ஓரமாக நிறுத்தி டிரைவர் பலி
/
கார் ஓட்டும் போது மாரடைப்பு; ஓரமாக நிறுத்தி டிரைவர் பலி
கார் ஓட்டும் போது மாரடைப்பு; ஓரமாக நிறுத்தி டிரைவர் பலி
கார் ஓட்டும் போது மாரடைப்பு; ஓரமாக நிறுத்தி டிரைவர் பலி
ADDED : செப் 29, 2024 11:41 PM
நாகர்கோவில் : கன்னியாகுமரி மாவட்டம், தக்கலை அருகே மேட்டுக் கடையை சேர்ந்தவர் ஜான்சன், 61; துபாயில் டிரைவராக பணியாற்றி ஊருக்கு வந்திருந்தார். ஆக்டிவ் டிரைவராக நேற்று காலை தக்கலையைச் சேர்ந்த டாக்டர் குடும்பத்துடன் ஜான்சன் திருநெல்வேலி புறப்பட்டார்.
நாகர்கோவில் -- திருநெல்வேலி தேசிய நெடுஞ்சாலையில் ஆரல்வாய்மொழி அருகே கார் வந்து கொண்டிருந்த போது, நெஞ்சுவலி ஏற்பட்டு மயக்கம் வருவதை உணர்ந்த ஜான்சன், உடனடியாக ரோட்டோரம் காரை நிறுத்தி அப்படியே சாய்ந்தார்.
அவர் உடனடியாக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப் பட்டார். அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.