/
உள்ளூர் செய்திகள்
/
கன்னியாகுமரி
/
பயங்கரவாதிகளால் கொல்லப்பட்ட எஸ்.ஐ., வில்சன் பெயரில் விடுதி
/
பயங்கரவாதிகளால் கொல்லப்பட்ட எஸ்.ஐ., வில்சன் பெயரில் விடுதி
பயங்கரவாதிகளால் கொல்லப்பட்ட எஸ்.ஐ., வில்சன் பெயரில் விடுதி
பயங்கரவாதிகளால் கொல்லப்பட்ட எஸ்.ஐ., வில்சன் பெயரில் விடுதி
ADDED : ஜூலை 29, 2025 05:16 AM
நாகர்கோவில்; பயங்கரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்ட எஸ்.ஐ., வில்சன் பெயரில் கன்னியாகுமரியில் காவலர் தங்கும் விடுதி திறக்கப்பட்டது
2020 ஜனவரி எட்டாம் தேதி இரவு களியக்காவிளை போலீஸ் செக் போஸ்டில் பணியில் இருந்த எஸ். ஐ. வில்சன் 57, சுட்டுக் கொல்லப்பட்டார். கன்னியாகுமரி மாவட்டம் திரு விதாங்கோட்டை சேர்ந்த அப்துல் சமீம் 29, கோட்டாரை சேர்ந்த தவுபிக் 27 கைது செய்யப்பட்டனர். பின்னர் இந்த வழக்கு விசாரணை என்.ஐ.ஏ.-க்கு மாற்றப் பட்டது. இவர்களுக்கு பல பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பு இருப்பதாக விசாரணையில் தெரியவந்தது.
இந்நிலையில் கன்னியாகுமரியில் போலீசார் மற்றும் அவரது குடும்பத்தினர் தங்குவதற்காக உருவாக்கப்பட்ட காவலர் தங்கும் விடுதிக்கு வில்சன் பெயர் வைக்கப்பட்டுள்ளது. நேற்று காலை எஸ்.பி ஸ்டாலின் முன்னிலையில் வில்சனின் மனைவி ஏஞ்சல் மேரி திறந்து வைத்தார். அப்போது அவரது கண்கள் கலங்கியது.