/
உள்ளூர் செய்திகள்
/
கன்னியாகுமரி
/
'20க்கு மேல் தி.மு.க., வென்றால் நாங்கள் அரசியல் பேசமாட்டோம்' பா.ஜ., பொதுச் செயலாளர் சீனிவாசன் சவால்

ADDED : டிச 26, 2024 06:22 AM
நாகர்கோவில் :   2026-ல்  தி.மு.க., 20க்கும் மேற்பட்ட இடங்களில் வென்றால் நாங்கள்அரசியல் பேசுவதை நிறுத்துவோம் என பா.ஜ., மாநில பொதுச் செயலாளர் சீனிவாசன் கூறினார்.
மார்த்தாண்டத்தில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
ஆணவ படுகொலைகளும், தலித் மீதான தாக்குதல்களும் தமிழகத்தில் அதிகரித்துள்ளதாக மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் கூறியுள்ளார். இது தமிழக அரசு வெட்கப்பட வேண்டியவிஷயம். தி.மு.க., அரசு விளக்கம் அளிக்க வேண்டும்.
தைப்பூசத்திற்கு அ.தி.மு.க., அரசு பொது விடுமுறை அறிவித்தது. பிற மாநிலங்களை போல சிவராத்திரிக்கும் தமிழ்நாட்டில் பொது விடுமுறை வழங்க வேண்டும்.
விஜய்க்கு முதல்வராக ஆசை இருக்கிறது. சினிமா புகழை அரசியலுக்கு பயன்படுத்த அவர் முயற்சிக்கிறார். விஜய் வாங்கும் ஓட்டால் தி.மு.க., ஓட்டு பிரியும். அதை தடுக்க விஜயை பா.ஜ., இயக்குவதாக கூறுகிறார்கள். 2026-ல்  தி.மு.க., 20க்கு மேற்பட்ட இடங்களில் வென்றால் நாங்கள் அரசியல் பேசுவதை நிறுத்துவோம். 2026ல் தி.மு.க.,வுக்கு எதிராக வலிமையான கூட்டணியை பா.ஜ., உருவாக்கும். அதன் மூலம் தி.மு.க., ஆட்சி அகற்றப்படும். இவ்வாறு அவர் கூறினார்.