/
உள்ளூர் செய்திகள்
/
கன்னியாகுமரி
/
பள்ளிச் சீருடையில் மதுபானம் வாங்கிச் சென்ற சிறுவன் வைரலான வீடியோ பற்றி விசாரணை

ADDED : ஜூன் 04, 2025 02:13 AM
நாகர்கோவில்:நாகர்கோவிலில் பள்ளிச் சீருடையில் சிறுவன் மதுபானம் வாங்கிச் சென்ற சம்பவம் தொடர்பான வீடியோ வைரலானதை தொடர்ந்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாகர்கோவில் வடசேரி பஸ் ஸ்டாண்ட் அருகில் டாஸ்மாக் கடை ஒன்று உள்ளது. இந்த கடைக்கு பள்ளி சீருடையில் வந்த ஒரு சிறுவன் மதுபான பாட்டில் வாங்கிவிட்டு ரோட்டை கடக்க முயற்சிக்கிறார். அப்போது வாகனங்கள் வேகமாக வருவதால் மீண்டும் டாஸ்மாக் கடை அருகே ஒதுங்கி நின்றார்.
நெரிசல் குறைந்த பின்னர் பின்னர் அங்கிருந்து புறப்பட்டு செல்கிறார். இந்த வீடியோ வைரலான நிலையில் பள்ளி சீருடையில் வந்தவருக்கு டாஸ்மாக் ஊழியர் எப்படி மதுபானம் வழங்கினார் என்ற கேள்வியை சமூக ஆர்வலர்கள் எழுப்பியுள்ளனர். இது தொடர்பாக டாஸ்மாக் அதிகாரிகளும் போலீசாரும் விசாரணை நடத்தி வருகின்றனர்.