/
உள்ளூர் செய்திகள்
/
கன்னியாகுமரி
/
ஜெ., கருணாநிதியை விட பெரிய தலைவரா?: விஜயை மீண்டும் சீண்டிய சீமான்
/
ஜெ., கருணாநிதியை விட பெரிய தலைவரா?: விஜயை மீண்டும் சீண்டிய சீமான்
ஜெ., கருணாநிதியை விட பெரிய தலைவரா?: விஜயை மீண்டும் சீண்டிய சீமான்
ஜெ., கருணாநிதியை விட பெரிய தலைவரா?: விஜயை மீண்டும் சீண்டிய சீமான்
ADDED : நவ 13, 2024 12:10 AM

நாகர்கோவில் ; ''முன்னாள் முதல்வர்கள் ஜெயலலிதா, கருணாநிதியை விட பெரிய தலைவரா,'' என, கன்னியாகுமரி மாவட்டம் திக்கணங்கோட்டில் தமிழக வெற்றி கழகம் தலைவர் விஜயை நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீண்டும் கடுமையாக சீண்டினார்.
இம்மாவட்டத்தில் நடந்த பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சீமான் திக்கணங்கோட்டில் அளித்த பேட்டி:
அரசு நலத்திட்டங்களுக்கு முன்னாள் முதல்வர் கருணாநிதி பெயர் தான் சூட்ட வேண்டுமா. ஏன் எங்கள் முன்னோர்கள் யாரும் இல்லையா. கன்னியாகுமரி மண்ணிலேயே தலைவர்கள் நேசமணி, ஜீவானந்தம் இருந்தனர். கப்பலோட்டிய தமிழனை தாண்டி ஒரு தியாகி உள்ளாரா. ஆனால் மக்கள் வரி பணத்தில் கட்டப்படும் பஸ் ஸ்டாண்ட், பன்னாட்டு நிறுவனங்களுக்கு கருணாநிதி பெயர்தான் வைக்கப்படுகிறது.
காவிரி நதிநீர் உரிமை, கச்சத்தீவு, கல்வி, மருத்துவம் மாநில பட்டியலில் இருந்து பொதுபட்டியலுக்கு சென்றபோதெல்லாம் யார் ஆட்சியில் இருந்தார்கள். ஒரே நாடு ஒரே தேர்தல், ஒரே ரேஷன் கார்டு திட்டங்கள் வரும்போதெல்லாம் பார்த்துக்கொண்டிருந்தது யார். திட்டமிட்டு செய்ததெல்லாம் வஞ்சகமும், துரோகமும்தான்.
காவிரியில் ஒரு சொட்டு தண்ணீர் தர முடியாது என கர்நாடகா காங்., முதல்வர் சித்தாராமையா, துணை முதல்வர் சிவகுமார் கூறுகின்றனர். ஆனால் அந்த கட்சி வெற்றிக்கு முதல்வர் ஸ்டாலின் சென்று பிரசாரம் செய்து வாக்கு சேகரித்தார். காவிரியில் தண்ணீர் தர மறுக்கும் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி இல்லை என சொல்ல ஏன் இவர்களுக்கு துணிவு இல்லை.நாம் தமிழர் கட்சியின் ஓட்டுகள் சிதறுகிறது. அது த.வெ.க-.,வுக்கு போகிறது என சொல்கிறார்கள். த.வெ.க.,-க்குச் செல்பவர்கள் நாம் தமிழர் கட்சியை சேர்ந்தவர்களே கிடையாது.
நான் முன்னாள் முதல்வர்கள் கருணாநிதி, ஜெயலலிதா காலத்திலே கட்சி துவங்கியவன். அவர்களை விட விஜய் பெரிய தலைவரா அல்லது அவர்களை விட கூட்டம் அதிகம் வந்து விட்டதா.
பொழுது போக்குத்தளத்தில் தலைவர்களை தேடுபவர்கள் என்னை பின் தொடரமாட்டார்கள். போராட்டக்களத்தில் தலைவர்களை தேடுபவர்கள்தான் என்னை பின் தொடர்வார்கள்.
இவ்வாறு அவர் பேட்டியளித்தார்.