/
உள்ளூர் செய்திகள்
/
கன்னியாகுமரி
/
மல்லிகை கிலோ ரூ.3,500 தோவாளையில் விற்பனை
/
மல்லிகை கிலோ ரூ.3,500 தோவாளையில் விற்பனை
ADDED : டிச 15, 2024 12:21 AM
நாகர்கோவில்:கன்னியாகுமரி மாவட்டம் தோவாளையில் அமைந்துள்ள பூ மார்க்கெட்டிற்கு தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்தும், பெங்களூரில் இருந்தும் பூக்கள் வருகின்றன. தோவாளையைச் சுற்றி உள்ள ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலத்தில் பூக்கள் பயிரிடப்படுகிறது.
தென் தமிழக மாவட்டங்களில் பெய்து வரும் கனமழையால் அங்கிருந்து பூக்கள் வரவில்லை. கன்னியாகுமரி மாவட்ட பூந்தோட்டங்களில் கடுமையான பனிப்பொழிவால் பூ விளைச்சல் கணிசமாக குறைந்துவிட்டது.
கார்த்திகை மாதம் என்பதால் பூக்களின் தேவை அதிகரித்துள்ளது. கேரளா வில் இருந்தும் வியாபாரிகள் இங்கு வருகின்றனர். வரத்து குறைவால் அனைத்து பூக்களுமே விலை உயர்ந்துள்ளது.
மல்லிகை நேற்று கிலோ 3,500க்கும், பிச்சி 1,500 ரூபாய்க்கும் விற்பனையானது. விலை உயர்வால் பூ கட்டும் தொழிலாளர்கள் மற்றும் பூக்கடை உரிமையாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.