/
உள்ளூர் செய்திகள்
/
கன்னியாகுமரி
/
விபத்தில் இறந்த பெண்ணின் உடலில் இருந்து நகை திருட்டு
/
விபத்தில் இறந்த பெண்ணின் உடலில் இருந்து நகை திருட்டு
விபத்தில் இறந்த பெண்ணின் உடலில் இருந்து நகை திருட்டு
விபத்தில் இறந்த பெண்ணின் உடலில் இருந்து நகை திருட்டு
ADDED : அக் 16, 2025 11:19 PM
நாகர்கோவில்: கன்னியாகுமரி அருகே கரும்பாட்டூரை சேர்ந்தவர் கார்த்திக்; தனியார் நிதி நிறுவன ஊழியர். மனைவி தருணா, 29. நேற்று முன்தினம் இருவரும் தோவாளையிலுள்ள உறவினர் வீட்டுக்கு சென்று விட்டு, டூ - வீலரில் வீடு திரும்பி கொண்டிருந்தனர்.
தோவாளையில் இருந்து நான்கு வழி சாலையில் அவர்கள் சென்றபோது, அந்த வழியாக வந்த கார், டூ -- வீலர் மீது மோதியது. இதில், துாக்கி வீசப்பட்டு படுகாயமடைந்த இருவரையும் அங்கிருந்தோர் மீட்டு, தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் தருணா இறந்து விட்டதாக தெரிவித்தனர். தருணாவின் உடல் பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இந்நிலையில் தருணாவின் கழுத்தில் அணிந்திருந்த தங்க சங்கிலி, வளையல், மோதிரம் உட்பட, 11 சவரன் நகை மாயமாகியிருந்தது. காயமடைந்த இருவரையும் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது, உடன் சென்றவர்கள் திருடினரா என்ற கோணங்களில் ஆரல்வாய்மொழி போலீசார் விசாரிக்கின்றனர்.