/
உள்ளூர் செய்திகள்
/
கன்னியாகுமரி
/
குமரியில் இ.எஸ்.ஐ., ஆஸ்பத்திரிநெல்லை துணை இயக்குனர் தகவல்
/
குமரியில் இ.எஸ்.ஐ., ஆஸ்பத்திரிநெல்லை துணை இயக்குனர் தகவல்
குமரியில் இ.எஸ்.ஐ., ஆஸ்பத்திரிநெல்லை துணை இயக்குனர் தகவல்
குமரியில் இ.எஸ்.ஐ., ஆஸ்பத்திரிநெல்லை துணை இயக்குனர் தகவல்
ADDED : செப் 21, 2011 12:32 AM
மார்த்தாண்டம்:கன்னியாகுமரி மாவட்டத்தில் இ.எஸ்.ஐ., ஆஸ்பத்திரி அமைப்பதற்கு
முயற்சி செய்து வருவதாக குழித்துறையில் நடந்த இலவச மருத்துவ முகாம் துவக்க
விழாவில் துணை இயக்குனர் தெரிவித்தார்.இ.எஸ்.ஐ., திட்டத்தின் வைரவிழா
தேசிய அளவில் கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக குழித்துறை
இ.எஸ்.ஐ., அலுவலகத்தில் இலவச மருத்துவ முகாம் நடந்தது. முகாம் துவக்க
விழாவில் குழித்துறை கிளை மேலாளர் தியாகராஜன் வரவேற்றார். குளச்சல் டாக்டர்
ஜேம்ஸ் பிரேம்குமார் தலைமை வகித்தார். திருநெல்வேலி இ.எஸ்.ஐ., ஆஸ்பத்திரி
மருத்துவ அதிகாரி ஜாண்க்பாங்கி முன்னிலை வகித்தார்.
முகாம் துவக்க விழாவில் திருநெல்வேலி இ.எஸ்.ஐ., ஆஸ்பத்திரி துணை இயக்குனர்
வேலு பேசியதாவது:இ.எஸ்.ஐ., ஆஸ்பத்திரி மத்திய அரசு திட்டமாகும். 60
ஆண்டுகளுக்கு முன் இத்திட்டம் துவக்கப்பட்டது. ஆரம்பத்தில் இந்த திட்டம்
குறித்து பெரும்பாலானோருக்கு தெரியாது. தற்போது இந்த திட்டம் வளர்ச்சி
அடைந்துள்ளது. இ.எஸ்.ஐ., ன் மருத்துவ திட்டம் மாநில அரசின் கீழ் வரும்.
ஆனால் முழுமையான வசதி செய்யப்படவில்லை.இதனால் மத்திய அரசே நேரடியாக செய்து
வருகிறது. மத்திய இ.எஸ்.ஐ., சார்பில் சென்னை கே.கே.நகரில் நவீன வசதிகளுடன்
ஆஸ்பத்திரி செயல்படுகிறது. மாநில அரசு சார்பில் சென்னை அயினாபுரத்தில்
இ.எஸ்.ஐ., ஆஸ்பத்திரி உள்ளது. அங்கு போதுமான வசதி இல்லை.மத்திய அரசு
சார்பில் இரண்டாவது இ.எஸ்.ஐ., ஆஸ்பத்திரி திருநெல்வேலியில் 100
படுக்கையுடன் அமைக்கப்பட்டு வருகிறது. அடுத்ததாக தூத்துக்குடி, திருப்பூர்
மாவட்டங்களில் இ.எஸ்.ஐ., ஆஸ்பத்திரிகள் அமைக்கப்பட உள்ளது. கன்னியாகுமரி
மாவட்டத்தில் படுக்கை வசதிகளுடன் ஆஸ்பத்திரி அமைப்பதற்கு முயற்சிகள்
மேற்கொண்டு வருகிறோம்.இவ்வாறு திருநெல்வேலி இ.எஸ்.ஐ., ஆஸ்பத்திரி துணை
இயக்குனர் வேலு பேசினார்.தொடர்ந்து டாக்டர் ஜேம்ஸ் பிரேம்குமார் தலைமையில் இலவச மருத்துவ முகாம் நடந்தது. ஏராளமானோர் முகாமில் கலந்து கொண்டனர்.