/
உள்ளூர் செய்திகள்
/
கன்னியாகுமரி
/
மேற்குவங்க விபத்தில் குமரி பி.எஸ்.எப்., வீரர் பலிசொந்த ஊரில் உடலுக்கு ராணுவ மரியாதை

ADDED : செப் 21, 2011 12:32 AM
புதுக்கடை:மேற்குவங்க மாநிலத்தில் நடந்த வாகன விபத்தில் உயிரிழந்த
மறுகண்டான்விளையை சேர்ந்த பி.எஸ்.எப்., வீரரின் உடல் ராணுவ மரியாதையுடன்
அடக்கம் செய்யப்பட்டது.காப்புக்காடு, உதச்சிக்கோட்டை அருகே
மறுகண்டான்விளையை சேர்ந்தவர் குமாரசுவாமி மகன் அஜில்குமார்(31). இவர்
பி.எஸ்.எப்., வீரராக பணியாற்றி வந்தார். இவர் சம்பவத்தன்று
மேற்குவங்கத்தில் வாகன விபத்தில் சிக்கி உயிரிழந்தார். இவரது உடல் நேற்று
விமானம் மூலம் திருவனந்தபுரம் கொண்டு வரப்பட்டது.
அங்கிருந்து சொந்த ஊரான மறுகண்டான்விளைக்கு கொண்டு வரப்பட்டது. உடலை
பார்த்து மனைவி, பிள்ளைகள், உறவினர்கள் கதறி அழுதது அனைவரையும் கண்கலங்க
வைத்தது. அஜில்குமாரின் உடலுக்கு தேசிய கொடி போர்த்தி, பி.எஸ்.எப்., சப்
இன்ஸ்பெக்டர் மதுசூதனன் தலைமையில் போலீசார் மரியாதை செலுத்தினர்.
ஹேலன்டேவிட்சன் எம்.பி., ஜாண்ஜேக்கப் எம்.எல்.ஏ., விளாத்துறை பஞ்., தலைவர்
சுரேஷ், மாவட்ட காங்., செயலாளர் கனகராஜ், விளாத்துறை நகர தி.மு.க.,
செயலாளர் ஸ்டீபன்சன், பைங்குளம் நகர பா.ஜ., தலைவர் மோகனன், வட்டார
டி.ஒய்.எப்.ஐ., தலைவர் வின்சென்ட் உட்பட பலர் அஞ்சலி செலுத்தினர்.
தொடர்ந்து அஜில்குமாரின் உடல் அடக்கம் செய்யப்பட்டது.அஜில்குமாருக்கு
சலீனா(29) என்ற மனைவியும், அஜீஷா(6), அஜீனா(4) என்று இரண்டு பெண்
பிள்ளைகளும் உள்ளனர்.