/
உள்ளூர் செய்திகள்
/
கன்னியாகுமரி
/
கன்னியாகுமரி -- திருவனந்தபுரம் இரட்டை ரயில் பாதை பணியில் வேகம்
/
கன்னியாகுமரி -- திருவனந்தபுரம் இரட்டை ரயில் பாதை பணியில் வேகம்
கன்னியாகுமரி -- திருவனந்தபுரம் இரட்டை ரயில் பாதை பணியில் வேகம்
கன்னியாகுமரி -- திருவனந்தபுரம் இரட்டை ரயில் பாதை பணியில் வேகம்
ADDED : பிப் 03, 2024 01:47 AM
நாகர்கோவில்:கன்னியாகுமரி - திருவனந்தபுரம் இடையிலான இரட்டை ரயில் பாதை பணி வேகம் அடைந்துள்ளது. பட்ஜெட்டில் இந்த பணிக்காக ரூ.365 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
கன்னியாகுமரி - - திருவனந்தபுரம் இடையிலான 87 கி.மீ. இரட்டை ரயில் பாதை பணிகளுக்காக கேரளாவில் 38 சதவீதமும் தமிழகத்தில் 15 சதவீதமும் நில ஆர்ஜிதம் முடிந்துள்ளது. கேரளாவில் திருவனந்தபுரம் முதல் பாறசாலை வரை 35.2 எக்டேரும், அதைத் தொடர்ந்து கன்னியாகுமரி வரை தமிழகம் உட்பட்ட பகுதியில் 47.73 எக்டேர் நிலமும் ஆர்ஜிதம் செய்ய வேண்டியுள்ளது.
இதில் தமிழத்தில் 6. 65 எக்டோ நிலம் மட்டுமே ஆர்ஜிதம் செய்யப்பட்டு வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள நிலம் ஆர்ஜிதம் செய்வதற்காக சிறப்பு தாசில்தார் நியமிக்கப்பட்டு பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது.
இதற்கிடையில் இந்த இரட்டை ரயில் பாதை பணிக்காக நேற்று முன்தினம் தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட்டில் ரூ.365 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே நில ஆர்ஜிதம் செய்ய நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் தற்போதைய நிதி கட்டமைப்பு பணிகளுக்காக பயன்படுத்தப்படும் என்றும் ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

