/
உள்ளூர் செய்திகள்
/
கன்னியாகுமரி
/
மாணவ சமுதாயம் பாதிப்பு : முன்னாள் அமைச்சர் வேதனை
/
மாணவ சமுதாயம் பாதிப்பு : முன்னாள் அமைச்சர் வேதனை
ADDED : ஆக 01, 2011 01:56 AM
களியக்காவிளை : சமச்சீர் கல்வி திட்டம் செயல்படுத்தாததால் மாணவ சமுதாயத்தின் வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது என்று முன்னாள் அமைச்சர் சுரேஷ்ராஜன் பேசினார்.களியக்காவிளை டவுன் பஞ்., தி.மு.க., சார்பில் செயற்குழு, பொதுக்குழு தீர்மான விளக்க பொதுக்கூட்டம் நடந்தது.
கூட்டத்தில் களியக்காவிளை டவுன் பஞ்., தி.மு.க., செயலாளர் ஜெயச்சந்திரன் தலைமை வகித்தார். மேல்புறம் ஒன்றிய செயலாளர் சிற்றார் ரவிச்சந்திரன் முன்னிலை வகித்தார்.ஒன்றிய பொருளாளர் மாகீன் வரவேற்றார். ஹெலன் டேவிட்சன் எம்.பி, மாவட்ட பஞ்., தலைவி அஜிதா, மாநில பொதுக்குழு உறுப்பினர் மனோண்மணி, தலைமை செயற்குழு உறுப்பினர்கள் பொன்.ஜீவராஜ், ராஜரெத்தினம், மாவட்ட அவைத்தலைவர் ஜோசப்ராஜ், குழித்துறை நகர செயலாளர் பொன்.ஆசைதம்பி, மைக்கேல்குமார், புஷ்பலீலா ஆல்பன் எம்.எல்.ஏ., வாகை முத்தழகன் பேசினர்.
முன்னாள் அமைச்சர் சுரேஷ்ராஜன் பேசியதாவது:சமச்சீர் கல்வி திட்டத்தை தமிழகத்தில் செயல்படுத்தாததால் மாணவ சமுதாயத்தின் வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, இரண்டரை மாதத்தில் நான்கு ஆயிரம் கோடி ரூபாய்க்கு வரி விதிக்கப்பட்டுள்ளது. எவ்வித நல திட்டங்களையும் அறிமுகப்படுத்தாமல் அதிகளவு வரியை விதித்த தமிழக அரசு நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யும் போது எத்தனை ஆயிரம் கோடி ரூபாய் வரி விதிக்கிறார்கள் என்பதை பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும். தமிழகத்தில் தி.மு.க., வினர் மீது நில அபகரிப்பு வழக்கு பதிவு செய்து சிறையில் அடைக்கப்படுகின்றனர். பல்வேறு வழக்குகள் போட்டு சிக்க வைக்கின்றனர். தேர்தல் நேரத்தில் ஏழை பெண்களுக்கு தாலிக்கு 4 கிராம் தங்கம் வழங்கப்படும் என்று அறிவித்தனர்.இதை மாநிலம் முழுவதும் அமல்படுத்தவில்லை. ஏழை பொண்களுக்கு திருமண நிதி உதவி வழங்கப்டவில்லை. மணல், சிமென்ட், கம்பி உட்பட கட்டுமான பொருட்களின் விலை பல மடங்கு உயர்ந்துள்ளது. இழந்த உரிமைகளை மீண்டும் பெற வரும் உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க., வினருக்கு ஆதரவு தர வேண்டும். இவ்வாறு சுரேஷ்ராஜன் பேசினார்.கூட்டத்தில் கட்சி நிர்வாகிகள் போஸ், தேவதாஸ், மாவட்ட பிரதிநிதி றசல்ராஜ், கமால், ஜெயகுமாரி, வன்னியூ பாபு, கவுன்சிலர் ராஜூ உட்பட பலர் கலந்து கொண்டனர். களியக்காவிளை டவுன் பஞ்., துணைத்தலைவர் சலாவுதின் நன்றி கூறினார்.