/
உள்ளூர் செய்திகள்
/
கன்னியாகுமரி
/
பஸ் ஸ்டாண்டில் கிடந்த பெண்ணின் பணம் : இந்து முன்னணியினர் மீட்டு ஒப்படைத்தனர்
/
பஸ் ஸ்டாண்டில் கிடந்த பெண்ணின் பணம் : இந்து முன்னணியினர் மீட்டு ஒப்படைத்தனர்
பஸ் ஸ்டாண்டில் கிடந்த பெண்ணின் பணம் : இந்து முன்னணியினர் மீட்டு ஒப்படைத்தனர்
பஸ் ஸ்டாண்டில் கிடந்த பெண்ணின் பணம் : இந்து முன்னணியினர் மீட்டு ஒப்படைத்தனர்
ADDED : ஆக 02, 2011 11:50 PM
நாகர்கோவில் : நாகர்கோவில் பஸ் ஸ்டாண்டில் கிடந்த 15 ஆயிரம் ரூபாய் பணத்தை இந்து அன்னையர் முன்னணி பொறுப்பாளர் எடுத்து போலீசில் ஒப்படைத்தார்.
இந்து முன்னணியின் பெண்கள் அமைப்பான இந்து அன்னையர் முன்னணி பொறுப்பாளர் தேவி நேற்று காலை பஸ்சில் நாகர்கோவில் வந்தார். வடசேரி பஸ் ஸ்டாண்டில் வந்திறங்கிய போது கீழே பணத்துடன் பர்ஸ் கிடந்துள்ளது. அதை எடுத்து நாகர்கோவில் இந்து முன்னணி அலுவலகத்திற்கு கொண்டு சென்றார். நிர்வாகிகள் திறந்து பார்த்த போது அதில் 15 ஆயிரத்து 181 ரூபாய், ஒரு கண் ஆஸ்பத்திரியில் கண்ணாடி ஆர்டர் செய்த பில் ஆகியவை இருந்துள்ளது. பில்லில் முத்துலட்சுமி என்ற பெயர் இருந்தது. இந்து முன்னணி நகர தலைவர் ராஜா, செயலாளர் மணிகண்டன் ஆகியோர் பர்சை வடசேரி போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் பர்சில் இருந்த கண்ணாடி கடையை தொடர்பு கொண்டு கண்ணாடி ஆர்டர் செய்த முத்துலட்சுமியின் முகவரியை அறிந்து பணம் கிடைத்த தகவலை முத்துலட்சுமிக்கு தெரிவித்தனர். அவர் வந்ததும் இந்து முன்னணி நிர்வாகிகள் முன்னிலையில் சப் இன்ஸ்பெக்டர் ஜூடி பணத்தை முத்துலட்சுமியிடம் ஒப்படைத்தார். இது குறித்து முத்துலட்சுமி கூறும்போது, நகை வாங்குவதற்காக கொண்டு வந்த பணம் பஸ் ஸ்டாண்டில் வைத்து தொலைந்து விட்டதால் நகை வாங்காமல் திரும்பி செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. பணத்தை கண்டெடுத்து தந்த இந்து முன்னணி பெண்கள் அமைப்பு பொறுப்பாளருக்கும், நகர நிர்வாகிகளுக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன் என கூறினார்.