/
உள்ளூர் செய்திகள்
/
கன்னியாகுமரி
/
தண்டவாளத்தில் தண்டால் எடுத்து 'ரீல்ஸ் ' பதிவிட்ட நபர் கைது
/
தண்டவாளத்தில் தண்டால் எடுத்து 'ரீல்ஸ் ' பதிவிட்ட நபர் கைது
தண்டவாளத்தில் தண்டால் எடுத்து 'ரீல்ஸ் ' பதிவிட்ட நபர் கைது
தண்டவாளத்தில் தண்டால் எடுத்து 'ரீல்ஸ் ' பதிவிட்ட நபர் கைது
ADDED : ஏப் 16, 2025 01:13 AM

நாகர்கோவில்:நாகர்கோவில் ஜங்ஷன் ரயில்வே ஸ்டேஷனில், தண்டவாளத்தில் தண்டால் எடுத்தவரை, நேற்று ரயில்வே போலீசார் கைது செய்தனர்.
குமரி மாவட்டம், நாகர்கோவில் அருகே தாமரைகுட்டிவிளையைச் சேர்ந்தவர் கண்ணன், 35; பளுதுாக்கலில் சாதனை படைத்தவர். இவர், 13 டன் எடை கொண்ட லாரியை இழுத்தும், மண் அள்ளும் இயந்திரத்தை இழுத்தும் சாதனை படைத்துள்ளார்.
சில நாட்களுக்கு முன், இவரும், நண்பர் ஒருவரும் தண்டவாளத்தில் தண்டால் எடுத்து, அதை, 'ரீல்ஸ்' பதிவு செய்து வெளியிட்டிருந்தனர். ரயில்வே ஸ்டேஷன் மற்றும் தண்டவாளத்தில் அத்துமீறி நுழைவது, ரயில்வே சட்டப்படி தண்டனைக்குரிய குற்றம்.
வீடியோவை ஆதாரமாக கொண்டு, கண்ணனை நாகர்கோவில் ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் கைது செய்தனர். பின், அவர் ஜாமினில் விடுவிக்கப்பட்டார்.