/
உள்ளூர் செய்திகள்
/
கன்னியாகுமரி
/
பயிற்சி ஆசிரியையை கண்ணாடி துண்டுகளால் குத்தியவர் கைது * காதலை கைவிட்டதால் ஆத்திரம்

ADDED : செப் 26, 2024 03:14 AM
நாகர்கோவில்:கன்னியாகுமரி மாவட்டம் புதுக்கடை அருகே குடியை விடாததால் காதலை கைவிட்ட பயிற்சி ஆசிரியையை கண்ணாடி துண்டுகளால் வெட்டிய இளைஞரை போலீசார் கைது செய்தனர்.
புதுக்கடை அருகே பைங்குளத்தைச் சேர்ந்த பிருந்தா 23, அப்பகுதியில் உள்ள கல்லூரியில் பி.எட்., இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். கொல்லங்கோடு அரசு மேல்நிலைப்பள்ளியில் பயிற்சி ஆசிரியராக பணிபுரிந்தும் வருகிறார். அதே பகுதியைச் சேர்ந்தவர் அருண் 36. இருவரும் சில ஆண்டுகளாக காதலித்துள்ளனர். அருணுக்கு குடிப்பழக்கம் இருந்த நிலையில் நாளுக்கு நாள் அதிகரித்தும் வந்தது. பிருந்தா சொல்லியும் அருண் கேட்கவில்லை. இதனால் அவருடனான காதலை பிருந்தா கைவிட்டார்.
ஆனால் அருண் தொடர்ந்து அவரை டார்ச்சர் செய்து வந்துள்ளார். தன்னை காதலிக்கும்படி கூறியும் பிருந்தா கண்டுகொள்ளாததால் ஆத்திரமடைந்த அருண் ஸ்கூட்டியில் சென்ற பிருந்தாவை தடுத்து நிறுத்தி கண்ணாடி துண்டுகளால் குத்தினார். கீழே விழுந்த அவரை தாக்கி விட்டு தப்பி சென்றார். படுகாயமுற்ற பிருந்தா குழித்துறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் கொடுத்த புகாரின் பேரில் அருணை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.