/
உள்ளூர் செய்திகள்
/
கன்னியாகுமரி
/
சார் பதிவாளர் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைக்க முயன்றவர் கைது
/
சார் பதிவாளர் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைக்க முயன்றவர் கைது
சார் பதிவாளர் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைக்க முயன்றவர் கைது
சார் பதிவாளர் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைக்க முயன்றவர் கைது
ADDED : டிச 08, 2024 02:43 AM
நாகர்கோவில்,:கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் சார்பதிவாளர் அலுவலகத்தில் சார்பதிவாளர் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைக்க முயன்ற டிராவல்ஸ் உரிமையாளரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
கருங்கல் அருகே சுண்ட விளையை சேர்ந்தவர் ஜஸ்டஸ் மார்ட்டின்.
இப்பகுதியில் டிராவல்ஸ் நடத்தி வருகிறார். இவர் கருங்கல் போலீஸ் ஸ்டேஷன் அருகே வாங்கிய ஒரு சென்ட் நிலத்தைப்பதிவு செய்வதற்காக கருங்கல் சார்பதிவாளர் அலுவலகத்தில் விண்ணப்பித்துள்ளார்.
விண்ணப்பத்தை மாவட்ட பதிவாளர் ஆய்வு செய்த பின்னரே பதிவு செய்து தர முடியும் என்று சார்பதிவாளர் (பொறுப்பு) ஹரி கிருஷ்ணன் கூறியுள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த ஜஸ்டஸ் மார்ட்டின், நேற்று முன்தினம் மாலை அலுவலகம் சென்று மறைத்து வைத்திருந்த பெட்ரோலை சார் பதிவாளர் ஹரி கிருஷ்ணன் மற்றும் ஊழியர்கள் மீது ஊற்றி தீ வைக்க முயன்றுள்ளார். ஆனால் தீக்குச்சி அணைந்து விட்டது.
இதனால் ஊழியர்கள் அவசர அவசரமாக வேறு அறைக்குச் சென்று உள்பக்கமாக பூட்டிக் கொண்டனர். ஜஸ்டிஸ் மாட்டினை கருங்கல் போலீசார் கைது செய்து நாகர்கோவில் சிறையில் அடைத்தனர்.