/
உள்ளூர் செய்திகள்
/
கன்னியாகுமரி
/
நண்பர் மனைவியுடன் வசித்தவர் தற்கொலை
/
நண்பர் மனைவியுடன் வசித்தவர் தற்கொலை
ADDED : மார் 29, 2025 06:48 AM
நாகர்கோவில்; வேலுார் மாவட்டம் ஆம்பூர் கட்டை மேடு பகுதியைச் சேர்ந்தவர் கோகுல் 25. வெல்டிங் தொழிலாளி. மனைவி துளசி 21.
திருமணமாகி நான்கு ஆண்டுகள் ஆகிறது. கோகுல் இரண்டு வாரங்களுக்கு முன் நாகர்கோவில் அவ்வை சண்முகம் சாலையில் உள்ள ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து குடியேறினார். இந்நிலையில் அவர் வசித்து வந்த வீட்டிலிருந்து துர்நாற்றம் வீச தொடங்கியது.
கோட்டார் போலீசார் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது மின்விசிறியில் கோகுல் இறந்த நிலையில் கிடந்தார். அவரது ஆதார் கார்டு அடிப்படையில் விசாரணை நடத்திய போது அவர் அழைத்து வந்தது மனைவி அல்ல.
நண்பனின் மனைவி என்பதும் தெரிய வந்தது. அவருடன் வந்த அந்தப் பெண் சில நாட்களில் மீண்டும் ஆம்பூருக்கு சென்று விட்டார்.
இதனால் கோகுல் வீட்டில் தனியாக இருந்துஉள்ளார். தனது கள்ளக்காதல் விவகாரம் மனைவிக்கும் நண்பர்களுக்கும் தெரிந்து விட்டதால் அவர் தற்கொலை செய்திருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர்.