/
உள்ளூர் செய்திகள்
/
கன்னியாகுமரி
/
ஆற்றை கடந்த போது பால் வியாபாரி பலி
/
ஆற்றை கடந்த போது பால் வியாபாரி பலி
ADDED : ஜன 25, 2025 01:59 AM
நாகர்கோவில்:சுசீந்திரம் அருகே பழையாற்றை நீந்தி கடந்து செல்ல முயன்ற பால் வியாபாரி, மயக்கமடைந்து தண்ணீரில் மூழ்கி இறந்தார்.
கன்னியாகுமரி மாவட்டம், சுசீந்திரம், ஆசிரமம் வடக்கு தெருவை சேர்ந்தவர் சுடலை, 52. இவரது மனைவி பகவதி அம்மாள். இரண்டு மகன்கள், மகள்கள் உள்ளனர்.
பால் வியாபாரியான இவர், சுசீந்திரம் பழையாற்றின் மறுகரையில் அமைந்துள்ள வடகரை பகுதியில் கொட்டகை அமைத்து, பசு மாடுகளை வளர்த்து வந்தார்.
தினமும் ஆற்றை நீந்தி கடந்து சென்று, மாடுகளை மேய்ச்சலுக்கு கூட்டி செல்வது வழக்கம். நேற்று முன்தினமும் அதுபோல மாடுகளை பார்க்க, பழையாற்றில் நீந்தி சென்ற போது, திடீரென சுடலைக்கு மயக்கம் ஏற்பட்டதால் தண்ணீரில் மூழ்கினார்.
அங்கு குளித்துக் கொண்டிருந்தவர்கள் அவரை மீட்டு, ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனைக்கு துாக்கிச் சென்றனர். அவர், ஏற்கனவே இறந்து விட்டதை டாக்டர்கள் உறுதிபடுத்தினர்.

