/
உள்ளூர் செய்திகள்
/
கன்னியாகுமரி
/
ஆவணங்களுக்கு இடையே பணம் 8 போலீசார் ஆயுதப்படைக்கு மாற்றம்
/
ஆவணங்களுக்கு இடையே பணம் 8 போலீசார் ஆயுதப்படைக்கு மாற்றம்
ஆவணங்களுக்கு இடையே பணம் 8 போலீசார் ஆயுதப்படைக்கு மாற்றம்
ஆவணங்களுக்கு இடையே பணம் 8 போலீசார் ஆயுதப்படைக்கு மாற்றம்
ADDED : ஜன 10, 2025 02:34 AM
நாகர்கோவில்,:திருநெல்வேலியில் இருந்து கனிம வளம் ஏற்றி வரும் லாரிகளை முறைப்படுத்துவதற்காக, ஆரல்வாய்மொழி மற்றும் குமாரபுரத்தில் போலீஸ் சோதனை சாவடி அமைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், புதிதாக பொறுப்பேற்றுள்ள எஸ்.பி., ஸ்டாலின் நேற்று முன்தினம் நள்ளிரவில் இந்த சோதனைச் சாவடியில் ஆய்வு மேற்கொண்டார். நேராகச் சென்று வாகன உரிமையாளர்கள் கொடுத்த ஆவணங்களை சோதித்த போது, சில ஆவணங்களுக்கு இடையில் ரூபாய் நோட்டுகள் பதுக்கி இருப்பதை கண்டுபிடித்தார்.
இந்த பணம் யாருடையது என கேட்டதற்கு, அங்கு பணியில் இருந்த போலீஸ்காரர்கள் உரிய பதில் சொல்லவில்லை. இதை தொடர்ந்து, பணியில் இருந்த நான்கு பேரையும் ஆயுதப்படைக்கு மாற்றி உத்தரவிட்டார்.
அதுபோல குமாரபுரம் சோதனைச் சாவடிக்கு சென்ற எஸ்.பி., அங்கு பணியில் இருந்த போலீசாரை அங்கிருந்து போக சொல்லி விட்டு, தன்னுடன் வந்த போலீசாரை அங்கு நிறுத்தினார். அங்கு வந்த கனிமவள லாரி டிரைவர் ஆவணங்களுடன் பணமும் கொடுத்தார். 'இது எதற்காக' என்று கேட்டபோது, இது வழக்கமானது தானே என்று டிரைவர் கூறினார்.
இதை தொடர்ந்து, லாரி டிரைவருக்கு அபராதம் விதிக்க உத்தரவிட்ட எஸ்.பி., அங்கு பணியில் இருந்த நான்கு பேரையும் ஆயுதப் படைக்கு மாற்றி உத்தரவிட்டார்.