/
உள்ளூர் செய்திகள்
/
கன்னியாகுமரி
/
பண மோசடி: மதுரைக்காரர் உட்பட இருவர் கைது
/
பண மோசடி: மதுரைக்காரர் உட்பட இருவர் கைது
ADDED : மார் 26, 2025 02:20 AM
நாகர்கோவில்:கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே பணம் இரட்டிப்பு மோசடியில் ம.தி.மு.க., நிர்வாகி உட்பட இரண்டு பேரை போலீசார் கைது செய்தனர்.
தக்கலை அருகே பள்ளியாடியைச் சேர்ந்தவர் டாஸ்பின் விஜயகுமார். வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி ஜினிலா 32. இவர்களது பக்கத்து வீட்டை சேர்ந்தவர் குமார் என்ற பள்ளியாடி குமார் 46. ம.தி.மு.க., மாவட்ட அணி நிர்வாகியாக உள்ளார். அவரது நண்பர் மதுரையைச் சேர்ந்த இம்ரான் 25.
இவர்கள் இருவரும் கிரிப்டோ கரன்சி மாற்றும் தொழிலில் ஈடுபட்டு வந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
அப்போது ஜினிலாவிடம் தங்கள் தொழிலில் ரூ.ஒரு லட்சம் முதலீடு செய்தால் ரூ.இரண்டு லட்சம் கிடைக்கும் எனக்கூறி ரூ. 27 லட்சத்து 83 ஆயிரம் பெற்றுள்ளனர். ஆனால் நீண்ட நாட்கள் ஆகியும் அவருக்கு கூடுதல் பணம் வழங்கவில்லை.
பணத்தை திரும்ப கேட்டபோது குமார் சரியாக பதில் அளிக்கவில்லை. இதைத் தொடர்ந்து ஜினிலா போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் கிரிஸ்டி மற்றும் போலீசார் விசாரித்து குமார், இம்ரானை கைது செய்தனர்.