/
உள்ளூர் செய்திகள்
/
கன்னியாகுமரி
/
குழந்தையை காட்ட மறுத்த எச்.எம்.,க்கு தாய் 'பளார்'
/
குழந்தையை காட்ட மறுத்த எச்.எம்.,க்கு தாய் 'பளார்'
ADDED : மார் 18, 2025 01:10 AM
நாகர்கோவில் : கன்னியாகுமரி மாவட்டம், அருமனை அருகே இடைக்கோடு அரசு தொடக்கப்பள்ளியில் தலைமை ஆசிரியராக பணிபுரிபவர் ஜான் கிறிஸ்டோபர். இவர், பள்ளியில் இருந்தபோது, 26 வயது பெண், பள்ளி அலுவலகத்தில், ஒரு மாணவியின் பெயரை கூறி, அவள் தன் மகள் என்றும், அவரை பார்க்க வேண்டும் என்றும் கேட்டுள்ளார்.
ஏற்கனவே அந்த குழந்தையின் தந்தை, பள்ளியில் சேர்க்கும்போதே, தன்னைத்தவிர வேறு யார் வந்தாலும் குழந்தையை பார்க்க அனுமதிக்கக் கூடாது என, பதிவு செய்திருந்தார்.
இதனால் குழந்தையை காண்பிக்க தலைமையாசிரியர் மறுத்தார். இதில், அந்த பெண்ணுக்கும், தலைமை ஆசிரியருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றிய நிலையில், அந்த பெண் தலைமையாசிரியர் கன்னத்தில் ஓங்கி அறைந்தார்.
பின், பள்ளியில் இருந்து ஓட்டம் பிடித்தார். இது தொடர்பாக, ஜான் கிறிஸ்டோபர் அருமனை காவல் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் அந்த பெண் மீது வழக்குப்பதிவு செய்து, அவரை தேடி வருகின்றனர்.