/
உள்ளூர் செய்திகள்
/
கன்னியாகுமரி
/
தந்தையை கொன்ற என் கணவர் அரக்கன் மனைவி வாக்குமூலம்
/
தந்தையை கொன்ற என் கணவர் அரக்கன் மனைவி வாக்குமூலம்
ADDED : ஜன 22, 2025 02:08 AM
நாகர்கோவில்:கன்னியாகுமரி மாவட்டம் அருமனை அருகே தந்தையை கொலை செய்த என் கணவர் ஒரு அரக்கன் என அவரது மனைவி தெரிவித்துள்ளார்.
அருமனை அருகே பத்துகாணி பள்ளித்தர விளையைச் சேர்ந்த கூலித்தொழிலாளி ரசல் 67. இவரது மகன் லாரி டிரைவர் மெஜோ 34. இவரது மனைவி சோபி 27. இவர்களுக்கு இரண்டரை மற்றும் 6 மாத வயதில் குழந்தைகள் உள்ளனர். தந்தைக்கும் மகனுக்கும் குடிப்பழக்கம் இருந்தது. இரு நாட்களுக்கு முன் இருவரும் சேர்ந்து மது குடித்ததில் தகராறு ஏற்பட்டது. இதில் மெஜோ ரசலை கொலை செய்தார்.
பின் மெஜோ கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
மெஜோவின் மனைவி சோபி போலீசில் கூறியதாவது: கணவர் போதை பழக்கத்திற்கு அடிமையானவர். மது அருந்துவதோடு கையில் எதையோ கசக்கி விட்டு அதனை உறிஞ்சி போதை ஏற்றும் பழக்கம் கொண்டவர். அவர் அந்த போதை பொருளை பயன்படுத்தும் போதெல்லாம் ராட்சஷனாக மாறி விடுகிறார். ஆத்திரத்தில் அவர் என்ன செய்வார் என அவருக்கே தெரியாது. சிறு பிரச்னை என்றாலும் கடுமையாக அடிப்பார். திட்டுவார். ஆனால் போதை தெளித்து விட்டால் மிகவும் சாந்தமாக நல்லவராக மாறி விடுவார். அலைபேசியில் பணம் செலுத்தி அடிக்கடி யாரிடமோ வீடியோ காலில் பேசுவார். யார் என்று கேட்டால் பதில் சொல்ல மாட்டார். வற்புறுத்தி கேட்டால் என்னிடம் கடுமையாக தகராறு செய்வார்.
இவ்வாறு அவர் கூறினார்.