/
உள்ளூர் செய்திகள்
/
கன்னியாகுமரி
/
பெண் பயணிகளை ஓட வைத்த டிரைவர் அதிகாரிகள் விசாரணை
/
பெண் பயணிகளை ஓட வைத்த டிரைவர் அதிகாரிகள் விசாரணை
ADDED : ஜூன் 25, 2025 02:18 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நாகர்கோவில்:கன்னியாகுமரி மாவட்டம் திட்டுவிளையிலிருந்து மார்த்தாண்டம் நோக்கி சென்று கொண்டிருந்த அரசு பஸ் தக்கலை அருகே வெள்ளியோடு சந்திப்புக்கு வந்தது. அந்த ஸ்டாப்பில் பெண்கள் காத்திருந்தனர்.
அவர்கள் கையை நீட்டி சைகை காண்பித்தும் டிரைவர் பஸ்சை நிறுத்தாமல் ஓட்டி சென்றார். இதனால் அவர்கள் பஸ்சின் பின்னாலேயே ஓடினர். இதை அங்கிருந்த இளைஞர் ஒருவர் வீடியோ எடுத்ததோடு டிரைவரிடம் தட்டிக் கேட்டார். இது தொடர்பான வீடியோக்கள் வைரலான நிலையில் அதுகுறித்து போக்குவரத்து கழக அதிகாரிகள் விசாரிக்கின்றனர்.