/
உள்ளூர் செய்திகள்
/
கன்னியாகுமரி
/
ஓமன் கடலில் தவிக்கும் மீனவர்களை மீட்க மனு
/
ஓமன் கடலில் தவிக்கும் மீனவர்களை மீட்க மனு
ADDED : செப் 28, 2024 02:13 AM
நாகர்கோவில்:கன்னியாகுமரி மாவட்டம், மார்த்தாண்டம் அருகே இரவிபுத்தன் துறையைச் சேர்ந்தவர் அருளப்பன். இவருக்கு சொந்தமான விசைப்படகில், கடந்த 11ல் கொச்சி துறைமுகத்திலிருந்து இவரும், பூத்துறை மற்றும் புதுச்சேரியை சேர்ந்த, 12 மீனவர்களும் கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர்.
கடந்த 15ல் ஆழ்கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த போது, இவர்கள் படகு இயந்திர கோளாறு ஏற்பட்டது. இதனால், நடுக்கடலில் தத்தளித்து வந்தனர். இதுபற்றி அருளப்பன் குடும்பத்துக்கு தகவல் கிடைத்ததை தொடர்ந்து, தமிழகம் மற்றும் கேரள மீனவ அமைப்புகளின் உதவியுடன், இவர்களை மீட்க நடவடிக்கை மேற்கொண்டனர்.
இதற்கிடையில், மீனவர்களை மீட்க உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, முதல்வர் ஸ்டாலின், குமரி கலெக்டர் அழகு மீனா ஆகியோரிடம், குமரி மீனவர்கள் சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது. தற்போது, இந்த மீனவர்கள் இந்தியா - ஓமன் நாடுகளின் எல்லையில், கடலில் தத்தளிப்பதாக தெரிய வந்துள்ளது.