நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காமுக வக்கீலுக்கு குண்டாஸ்
நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டம், தக்கலை அருகே முட்டைகாட்டைச் சேர்ந்த பள்ளி மாணவியரான இரண்டு சிறுமியர், 'இன்ஸ்டாகிராம்' காதலனை சந்திக்க இரவில் தனியாக சென்று கொண்டிருந்தபோது, அவர்களை தன் அலுவலகத்திற்கு அழைத்துச் சென்று ஒரு சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக தக்கலையைச் சேர்ந்த வக்கீல் அஜித்குமார், 32, போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
இவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய எஸ்.பி., ஸ்டாலின் பரிந்துரையை ஏற்று கலெக்டர் அழகு மீனா உத்தரவிட்டார். திருநெல்வேலி சிறையில் அடைக்கப்பட்டுள்ள இவரிடம் இதற்கான உத்தரவு வழங்கப்பட்டது.