/
உள்ளூர் செய்திகள்
/
கன்னியாகுமரி
/
13 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை ஆசிரியரிடம் போலீஸ் விசாரணை
/
13 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை ஆசிரியரிடம் போலீஸ் விசாரணை
13 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை ஆசிரியரிடம் போலீஸ் விசாரணை
13 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை ஆசிரியரிடம் போலீஸ் விசாரணை
ADDED : மார் 19, 2025 01:29 AM
நாகர்கோவில்:நாகர்கோவில் அருகே அரசு மேல்நிலைப் பள்ளியில் 13 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் மீது போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர்
அரசு மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் பத்தாம் வகுப்பு மாணவிக்கு ஆசிரியர் ஒருவர் பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். தலைமை ஆசிரியரிடம் பெற்றோர் புகார் செய்தனர். ஆனால் நடவடிக்கை இல்லை. இந்நிலையில் அந்த ஆசிரியரால் மேலும் 13 மாணவிகள் தலைமை ஆசிரியரிடம் புகார் அளித்தனர். அதன் மீதும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதையடுத்து நடவடிக்கை எடுக்கக்கோரி பெற்றோர் கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.
நேற்று மதியம் பெற்றோரும், பொதுமக்களும் பள்ளி முன் திரண்டு பாலியல் தொந்தரவு அளித்த ஆசிரியர், அதற்கு துணை போகும் தலைமை ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வடசேரி போலீசார் பள்ளியில் தலைமை ஆசிரியரிடம் விசாரணை நடத்தினர். பின்னர் அந்த ஆசிரியரிடம் விசாரணை நடைபெற்றது. பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகளும் தங்கள் விசாரணையை தொடங்கியுள்ளனர்.