/
உள்ளூர் செய்திகள்
/
கன்னியாகுமரி
/
பெண் சார்பதிவாளரின் மகள் வீட்டில் போலீஸ் சோதனை
/
பெண் சார்பதிவாளரின் மகள் வீட்டில் போலீஸ் சோதனை
ADDED : பிப் 24, 2024 02:05 AM
நாகர்கோவில்:திருநெல்வேலியில் வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்ட பெண் சார்பதிவாளர் வேலம்மாள் மகள் வீட்டில் நாகர்கோவில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர்.
திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரத்தைச் சேர்ந்தவர் வேலம்மாள். வி.கே.புரம் சார் பதிவாளர் அலுவலகத்தில் சார் பதிவாளராக பணிபுரிந்த இவர் வருமானத்துக்கு அதிகமாக ரூ.45.90 லட்சம் சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிவு செய்தனர். அவரது வீட்டிலும் போலீசார் சோதனையில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் கன்னியாகுமரி மாவட்டம் மருங்கூரில் உள்ள அவரது மகள் கிருஷ்ணவேணி வீட்டில் லஞ்ச ஒழிப்பு டி.எஸ்.பி., ஹெகடர் தர்மராஜ் மற்றும் போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். வீட்டில் கிருஷ்ணவேணி, கணவர் இன்ஜினியர் சங்கர் மற்றும் உறவினர்கள் இருந்தனர். இச்சோதனையில் வங்கி கணக்கு புத்தகங்கள், சொத்து ஆவணங்கள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. ஒரு வங்கியில் ரூ.10 லட்சம் நிரந்தர வைப்புத்தொகை தொடர்பான ஆவணங்களும் கைப்பற்றப்பட்டன.