/
உள்ளூர் செய்திகள்
/
கன்னியாகுமரி
/
கணவனை ஏமாற்றி வேறு நபருடன் திருமணம் மனைவியை தேடுது போலீஸ்
/
கணவனை ஏமாற்றி வேறு நபருடன் திருமணம் மனைவியை தேடுது போலீஸ்
கணவனை ஏமாற்றி வேறு நபருடன் திருமணம் மனைவியை தேடுது போலீஸ்
கணவனை ஏமாற்றி வேறு நபருடன் திருமணம் மனைவியை தேடுது போலீஸ்
ADDED : மே 11, 2025 02:30 AM
நாகர்கோவில்:கன்னியாகுமரி மாவட்டம் அருமனை அருகே கணவனை ஏமாற்றி சென்ற மனைவி வேறொருவரை திருமணம் செய்த வீடியோ இன்ஸ்டாகிராமில் வெளியானது. இதைத்தொடர்ந்து கணவர் போலீசில் புகார் செய்துள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டம் மயிலாடி பகுதியைச் சேர்ந்தவர் அஜித்குமார் 25. கட்டட தொழிலாளி. இவருக்கும் குலசேகரம் தும்பக்கோட்டையைச்சேர்ந்த அபிஷா 22 , என்பவருக்கும் 2022 - ல் திருமணம் நடந்தது. குலசேகரத்தில் அபிஷாவின் வீட்டிலேயே வசித்துவந்தனர். குழந்தைகள் இல்லை.
அபிஷா அருமனை சந்திப்பில் உள்ள தனியார் மருத்துவமனையில் நர்சாக பணிபுரிந்தார். மே 2 முதல் 9- வரை மருத்துவமனையில் தங்கி பணி புரிய வேண்டும் என்று கூறி சென்றார். ஆனால் மே 6 முதல் அவரது அலைபேசி 'சுவிட்ச் ஆப்' செய்யப்பட்டிருந்தது. மருத்துவமனையில் சென்று விசாரித்த போது உறவினர் ஒருவருடன் பைக்கில் சென்றதாக தெரிவித்தனர்.
இந்நிலையில் அபிஷா வேறொருவரை திருமணம் செய்த வீடியோ இன்ஸ்டாகிராமில் வெளியானது. இதை அஜித்குமாரின் நண்பர்கள் அவருக்கு காட்டியுள்ளனர். இதுகுறித்து அவர் அருமனை போலீசில் புகார் செய்தார். தலைமறைவாக உள்ள அபிஷா, அவரை திருமணம் செய்தவரை போலீசார் தேடுகின்றனர்.