/
உள்ளூர் செய்திகள்
/
கன்னியாகுமரி
/
பெண்ணிடம் சில்மிஷம்: போலீஸ்காரர் கைது
/
பெண்ணிடம் சில்மிஷம்: போலீஸ்காரர் கைது
ADDED : ஏப் 17, 2025 01:46 AM
நாகர்கோவில்:கன்னியாகுமரி மாவட்டம் ராஜாக்கமங்கலம் ஆலங்கோட்டை பகுதியை சேர்ந்தவர் ராஜேஷ் 30, நாகர்கோவில் ஆயுதப் படை போலீஸ்காரராக உள்ளார். அதே பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் மாவட்ட எஸ்.பி. யிடம் கொடுத்த புகாரில், ராஜேஷ் தன்னிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டதாகவும் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.
இது குறித்து விசாரணை நடத்த ராஜாக்கமங்கலம் இன்ஸ்பெக்டர் ராமருக்கு எஸ்.பி.ஸ்டாலின் உத்தரவிட்டார். புகார் உண்மை என தெரியவந்ததையடுத்து ராஜேஷ் கைது செய்யப்பட்டார். அவர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அவர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.