/
உள்ளூர் செய்திகள்
/
கன்னியாகுமரி
/
பிரதமர் மோடி இன்று கன்னியாகுமரி வருகை
/
பிரதமர் மோடி இன்று கன்னியாகுமரி வருகை
ADDED : மார் 15, 2024 01:35 AM
நாகர்கோவில்:கன்னியாகுமரி அருகே அகஸ்தீஸ்வரம் விவேகானந்தா கல்லுாரி மைதானத்தில் இன்று காலை நடைபெறும், லோக்சபா தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேச உள்ளார்.
கன்னியாகுமரி அருகே அகஸ்தீஸ்வரம் விவேகானந்தா கல்லுாரி மைதானத்தில் இன்று காலை 11:00 மணிக்கு நடக்கும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்க, குமரி ஹெலிகாப்டர் தளத்தில் பிரதமர் வந்து இறங்குகிறார்.
அங்கிருந்து காரில் மேடைக்கு வரும் பிரதமர் பொதுக்கூட்டத்தில் பேசுகிறார். பின், ஹெலிகாப்டர் மூலம் திருவனந்தபுரம் செல்கிறார்.
வரும் மார்ச் 18-ல் கோவைக்கு, கர்நாடக மாநிலம் பீதர் விமான நிலையத்தில் இருந்து வரும் அவர், கவுண்டம்பாளையம் பிரிவில் இருந்து ஆர்.எஸ்.,புரம் வரை, ரோடு ஷோ நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார்.
இதையொட்டி, மாநகர் முழுவதும், 5,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். வரும் 19ல், சேலத்தில் நடக்கும் பொதுக் கூட்டத்தில் பிரதமர் பேசுகிறார். இதற்காக, பிரதமரின் பாதுகாப்பு படையினர் இந்த நகரங்களில் முகாமிட்டுள்ளனர்.

