/
உள்ளூர் செய்திகள்
/
கன்னியாகுமரி
/
கனிம வள கடத்தலில் போலி அனுமதி சீட்டு அச்சடித்த அச்சக உரிமையாளர் கைது
/
கனிம வள கடத்தலில் போலி அனுமதி சீட்டு அச்சடித்த அச்சக உரிமையாளர் கைது
கனிம வள கடத்தலில் போலி அனுமதி சீட்டு அச்சடித்த அச்சக உரிமையாளர் கைது
கனிம வள கடத்தலில் போலி அனுமதி சீட்டு அச்சடித்த அச்சக உரிமையாளர் கைது
ADDED : அக் 22, 2024 11:34 PM
நாகர்கோவில்:நாகர்கோவில் அருகே போலி அனுமதி சீட்டு தயாரித்து கேரளாவுக்கு கனிம வளம் கடத்திய வழக்கில் அச்சக உரிமையாளர் உட்பட மேலும் நான்கு பேரை போலீசார் கைது செய்தனர்.
திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து மண் உள்ளிட்ட கனிம வளங்கள் அதிகமாக கேரளாவுக்கு கடத்தப்பட்டு வருகிறது.
இதற்காக கனிமவளத் துறையில் இருந்து குறைவான எண்ணிக்கையில் அனுமதிச்சீட்டு பெற்றுவிட்டு அதை போலியாக தயாரித்து அதிக அளவில் கடத்தி வந்தது தெரியவந்துள்ளது.
நாகர்கோவில் அப்பா மார்க்கெட் அருகே கோட்டார் போலீசார் நடத்திய வாகன சோதனையில் சிக்கிய நான்கு டாரஸ் லாரிகளில் போலி அனுமதி சீட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இது தொடர்பாக ஏழு பேர் கைது செய்யப்பட்டனர்.
போலீசாரின் விசாரணையில் தக்கலை அருகே வேர்கிளம்பி மார்க்கெட் பகுதியில் ஒரு அச்சகத்தில் போலி அனுமதி சீட்டு அச்சடிக்கப்பட்டு வருவது தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து திருவிதாங்கோடு சாமி தட்டு விளையைச் சேர்ந்த அச்சக உரிமையாளர் செந்தில் குமார் 34, கைது செய்யப்பட்டார். இங்கிருந்து போலி அனுமதி சீட்டுகளும் போலி முத்திரை கொண்ட ரப்பர் ஸ்டாம்புகளும் பறிமுதல் செய்யப்பட்டன.
இவரது தகவலில் மார்த்தாண்டம் வெட்டுமணி கூலி தொழிலாளி ஆகாஷ் குமார் 23, கனிமவள டாரஸ் லாரி டிரைவர் ரமேஷ் குமார் 44, திற்பரப்பு ராஜேஷ் 24, ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
இதை தொடர்ந்து கனிம வளக் கொள்ளையில் கைது செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது.